நடிகர் அஜித்குமார் நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தென்னிந்திய நடிகர்களுள் மிக முக்கியமான ஒருவர், அஜித்குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த துணிவு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் பெரும் வேட்டையை நிகழ்த்தியது.
இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் 62-ஆவது திரைப்படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. முன்னதாகவே, நடிகர் அஜித்குமாரின் 62-வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன்தான் இயக்குவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘ஏகே-62’ என்றும் பெயரிடப்பட்டது.
தற்போது வெளிவந்துள்ள அப்டேட்டின்படி, ஏகே-62 திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இத்திரைப்படத்தில் சந்தானம், அரவிந்த் சாமி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், ஐஸ்வர்யா ராய் ஏகே-62வில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
மேலும், இத்திரைப்படத்திற்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமஜெயம் கொலை வழக்கு; 4 பேரிடம் உண்மைக் கண்டறியும் சோதனை