Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சத்யராஜ் படப்பிடிப்பில் விபத்து; உயிரிழந்த லைட்மேன்

    சத்யராஜ் படப்பிடிப்பில் விபத்து; உயிரிழந்த லைட்மேன்

    நடிகர் சத்யராஜ் நடித்து வரும் வெப்பன் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் லைட்மேன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகர் சத்யராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த லவ் டுடே, கனெக்ட் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், தற்போது அவர் வெப்பன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான, ஏ.ஆர்.ஆர். ஃபில்ம் சிட்டி என்ற ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிற்காக ஏ.ஆர்.ஆர். ஃபில்ம் சிட்டி ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு வருகின்றது.

    இதில், சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த லைட்மேன் குமார் என்பவர் இன்று காலை 40 அடி உயரத்தில் விளக்குகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு குமார் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கவரைப்பேட்டை காவல்துறையினர் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழகம், தமிழ்நாடு சர்ச்சை; விளக்கமளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....