Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஏகே-62 படப்பிடிப்பு எப்போது? - வெளிவந்த தகவல்

    ஏகே-62 படப்பிடிப்பு எப்போது? – வெளிவந்த தகவல்

    நடிகர் அஜித்குமார் நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    தென்னிந்திய நடிகர்களுள் மிக முக்கியமான ஒருவர், அஜித்குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வலிமை திரைப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும், வசூலில் பெரும் வேட்டையை நிகழ்த்தியது.

    மேலும், வலிமை திரைப்படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், அஜித்குமார் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படமானது தற்போது பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

    இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் 62-ஆவது திரைப்படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. முன்னதாகவே, நடிகர் அஜித்குமாரின் 62-வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன்தான் இயக்குவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘ஏகே-62’ என்றும் பெயரிடப்பட்டது. 

    தற்போது வெளிவந்துள்ள அப்டேட்டின்படி, ஏகே-62 திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 17-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நடிகர், நடிகையர்களின் தேர்வு மும்மரமாக சென்றுக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏகே-62 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. 

    மேலும், இத்திரைப்படத்திற்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இலங்கைக்கு எதிரான முதல் போட்டி; ‘த்ரில்’ வெற்றிப் பெற்ற இந்தியா…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....