Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'ஐ ஆம் தி கேங்ஸ்டா' - துணிவுடன் களமிறங்கும் நடிகர் அஜித்குமார்! வெளிவந்த அப்டேட்..

    ‘ஐ ஆம் தி கேங்ஸ்டா’ – துணிவுடன் களமிறங்கும் நடிகர் அஜித்குமார்! வெளிவந்த அப்டேட்..

    துணிவு திரைப்படத்தின் மூன்றாவது பாடலாக ‘கேங்ஸ்டா’ எனும் பாடல் வருகிற 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு, மூன்றாவது முறையாக நடிகர் அஜித்குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் வினோத் ஆகியோரின் கூட்டணியில் இணைந்துள்ள திரைப்படம் தான் துணிவு. இப்படமானது பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது. 

    துணிவு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இவரது இசையில் துணிவு திரைப்படத்திலிருந்து இதுவரை வெளியாகிய ‘சில்லா சில்லா’ மற்றும் ‘காசேதான் கடவுளடா’ என்ற இரு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. 

    இந்நிலையில், துணிவு திரைப்படத்தின் மூன்றாவது பாடலாக ‘கேங்ஸ்டா’ எனும் பாடல் வருகிற 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது. படக்குழுவானது, இப்பாடல் வெளியீட்டில் புதிய முறை ஒன்றை கையாண்டுள்ளது. அதன்படி, பாடல் வரிகளை தற்போதே படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் வெளியாக இன்னும் இரண்டு நாள்கள் இருக்கும் நிலையில், பாடல் வரிகள் தற்போது வெளியிடப்பட்டிருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. 

    மேலும், ‘கேங்ஸ்டா’ பாடலானது,  ‘சீண்டுனா சிரிப்பவன், சுயவழி நடப்பவன், சரித்திரம் படைப்பவன்’  என்று தொடங்க, ‘அச்சத்த விலக்கி உச்சத்த பிடிச்சு ஊருக்குள்ள இருக்க மொத்த பயலும் எதிர்த்து நிக்கட்டும் ஐ ஆம் தி கேங்ஸ்டா’  என்று முடிவடைகிறது.

    இப்பாடலை விவேகா மற்றும் ஷபிர் இணைந்து எழதியுள்ளனர். ஷபிரே இப்பாடலை பாடியுமுள்ளார். 

    ஆஸ்கர் தேர்வுப் பட்டியல் வெளியீடு; இந்தியாவுக்கு கைக்கூடுமா விருது?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....