Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வலிமையில் இருந்து வெளியான புரோமோ; இரசிகர்கள் மகிழ்ச்சி!

    வலிமையில் இருந்து வெளியான புரோமோ; இரசிகர்கள் மகிழ்ச்சி!

    ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக இருந்த வலிமை கொரோனாவின் உருமாற்றமான, ஒமிக்ரான் காரணமாக வெளியாகாமல் போனது. இச்செய்தி பெருத்த ஏமாற்றமாக ரசிகர்களுக்கு அமைய வலிமை எப்போது திரைக்கு வருமென்று காத்திருக்க தொடங்கினர்.

    valimai 24இந்நிலையில் இந்த மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதன்படி, வலிமை படத்திற்க்கான புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித்குமார் ரசிகர்களும் வலிமை திரைப்படம் வெளியாவது குறித்து மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    வலிமை திரைப்படம் தமிழ் மொழியில் மட்டும் அல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மொத்தமாய் நான்கு மொழிகளில் வெளியாகிறது. சமீபத்தில் மற்ற மொழிகளில் வலிமை திரைப்படத்தின் முன்னோட்டங்கள் வெளியிடப்பட்டு அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

    வலிமை திரைப்படம் அவர்களுக்கு மற்ற மொழிகளில் இதுவரை உருவாக்காத மார்க்கெட்டை உருவாக்கி தரும் என்று பலரும் கணித்து வைத்துள்ளனர். 

    valimai ajith

    வலிமை திரைப்படமானது முதல்பாதி புலனாய்வு சார்ந்தவையாகவும், இரண்டாம் பாதி சண்டைக்காட்சிகள் நிறைந்ததாகவும்,  உணர்ச்சிப்பூர்வமாகவும் இருக்கும் என்றும் படத்தின் இயக்குனர் எச்.வினோத் அவர்கள் கூறிய நிலையில் படத்தின் முன்னோட்டமும் அதை உறுதி செய்தது.

    அஜித்குமார் ரசிகர்கள் வலிமை திருநாளுக்காய் காத்திருக்க, அவர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் இன்று வலிமை திரைப்படத்தின் முதல் புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி சண்டை காட்சிகள் இடம்பெற, அஜித் அவர்களின் மாஸ் வெளிப்பட பலருக்கும் தற்போது இந்த புரோமோ பிடித்த ஒன்றாக அமைந்திருக்கிறது. குறிப்பாக அஜித் ரசிகர்கள் இந்த புரோமோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து பகிர்ந்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

    புரோமோவைக் காண; வலிமை புரோமோ

    valimai

    வலிமை திரைப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை முதலிய வெற்றி திரைப்படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அஜித்குமாருக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....