நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தமிழக மாநகராட்சிகளில் அனைத்துக் கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு திமுகவுடன் காங்கிரஸ், விசிக,மதிமுக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில் கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்கவில்லை என கூட்டணி கட்சிகளே அரசல் புரசலாக திமுக மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனிடையே சிவகங்கை மாவட்டத்தில் கானாடுகாத்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் மத்தியமைச்சர் ப. சிதம்பரம் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கானாடுகாத்தான் பேரூராட்சி 4வது வார்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அங்கு திமுகவை சேர்ந்தவரும் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனால் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் மத்திய அமைச்சர் பி.சிதம்பரம் பேசுகையில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் ஒருவர் இதே தொகுதியில் நிற்கிறார். அவருக்கு யாரும் வேலை பார்க்க கூடாது என்று கட்சிக்காரர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதனால் அவருக்கு யாரும் ஓட்டும் போட வேண்டாம் என்ற பாணியில் பேசியிருந்தார்.
திமுக மற்றும் காங்கிரஸ் என இரு பெரிய கட்சிகளும் நீண்ட காலமாக கூட்டணி அமைத்திருக்கும் நிலையில் ப. சிதம்பரம் பேசியது மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஜோதிமணி திமுகவுடன் கூடிய கூட்டணி பேச்சு வார்த்தையில் சலசலப்பு ஏற்பட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் திமுகவை பற்றிய செய்திகளுக்கு