Tuesday, March 21, 2023
மேலும்
    Homeசெய்திகள்உலகம்தாக்குதலில் இருந்து பின் வாங்கும் ரஷ்யா -காரணம் என்ன??

    தாக்குதலில் இருந்து பின் வாங்கும் ரஷ்யா -காரணம் என்ன??

    உக்ரைன் எல்லையிலிருந்து  கொஞ்சம்  போர் வீரர்களை திரும்ப அழைத்தது ரஷ்யா. எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த தனது படைகளில் சிலவற்றை பாசறைக்குத் திரும்புமாறு ரஷ்ய ராணுவத் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்தப் படையினர் தங்களது தளங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

    army

    உக்ரைனுக்குச் சொந்தமான கிரீமியா என்ற தீபகற்பப் பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்து வைத்துள்ளது. இந்தப் பகுதியை கைப்பற்ற நேட்டோ படைகளின் உதவியுடன் உக்ரைன் முயற்சித்து வருகின்றது. இதனால் கோபமடைந்துள்ள ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து அதை துவம்சம் செய்ய ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகின.

    army

    இதனை  உறுதிப்படுத்தும் வகையில் உக்ரைன் எல்லைக்கு அருகே பெருமளவிலான ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. போர் மூண்டால் உக்ரைனுக்கு உதவ அமெரிக்காவும் தனது படைகளை அனுப்பி வைத்துள்ளது. நேட்டோ படையினரும் ஆயத்தமாக உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடர்ந்து ரஷ்யாவிற்கு கண்டனங்களை தெரிவித்து வந்தார். 

     

    இந்நிலையில் திடீரென உக்ரைன் எல்லைப் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த தனது படையினரில் சிலரை பாசறைகளுக்குத் திரும்ப ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.army இதையடுத்து அவர்கள் அங்கிருந்து திரும்பி வருகின்றனர்.

    தெற்கு மற்றும் மேற்கு ராணுவ பிரிவுகளைச் சேர்ந்த படையினருக்கான வேலைகள் முடிந்ததால் அவர்கள் தங்களது பாசறைக்குத் திரும்பி வருகின்றனர். ரயில் மூலமாகவும், சாலை மார்க்கமாகவும் அவர்கள் திரும்பி வருகின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை என்ன, என்ன காரணத்திற்காக அவர்கள் பாசறைக்குத் திரும்புகின்றனர் என்பதை தெரிவிக்கப்படவில்லை.

    army

     இதற்கிடையே, உக்ரைன் எல்லைப் பகுதியில் ரஷ்யா படைகளைக் குவித்துள்ளது தொடர்பாக பரபரப்பான சாட்டிலைட் படங்கள் வெளியாகியுள்ளன. சுகோய் போர் விமானங்களை பெருமளவில் ரஷ்யா எல்லைப் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல பீரங்கிப் படையினரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் ரஷ்யப் படைகள் ஆயத்த நிலையில் இருப்பதும்  தெரிய வந்துள்ளது.

    மேலும் உக்ரைன் – ரஷ்யா செய்திகளுக்கு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...