Saturday, March 16, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்துணிவு படப்பிடிப்பிற்காக தாய்லாந்து செல்லும் அஜித்குமார்.. வைரலான காட்சிகள்!

    துணிவு படப்பிடிப்பிற்காக தாய்லாந்து செல்லும் அஜித்குமார்.. வைரலான காட்சிகள்!

    துணிவு திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜித்குமார், தாய்லாந்து புறப்பட்டுச் செல்லும் காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு, மூன்றாவது முறையாக நடிகர் அஜித்குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் வினோத் ஆகியோரின் கூட்டணியில் இணைந்துள்ள திரைப்படம் தான் துணிவு.

    இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க ஜிப்ரான் இசையமைக்கிறார்.

    ஏற்கனவே, இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், நடிகர் அஜித்குமார் பங்குபெறும் காட்சிகளை படமாக இத்திரைப்பட குழு தாய்லாந்தில் முகாமிட்டுள்ளது.

    இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜித்குமார் சென்னை விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து தலைநகர் பேங்காக் புறப்பட்டுச் செல்லும் புகைப்படக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

    துணிவு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது அஜித்குமாரின் இந்த காட்சிகள் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....