Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்!

    அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்!

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்துள்ளனர். 

    இன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் காலை 9 மணியளவில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கியது. இப்பொதுக்குழு கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்து, ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் கட்சி தலைமை அலுவலகத்துக்குச் வந்தார். 

    இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து, அவரை உள்ளே அழைத்து சென்றனர். இந்நேரத்தில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் உண்டானது. 

    இரு தரப்பினரும் மோதிக்கொண்டதில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்தனர். அதோடு, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிமுக ஆதரவாளர்களின் வாகனங்களும், பொதுமக்களின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டது. மோதல் போக்கும் நீடித்தது. 

    இந்த மோதல் போக்கை தவிர்க்க, அதிமுக தலைமை அலுவலகத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டனர். இதோடு, ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

    இருப்பினும், தலைமை அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஓபிஎஸ் மீது அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடுத்துச் செல்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

    இந்நிலையில், கட்சி அலுவலகத்துக்குள் நுழைவதற்கு உரிமை இருப்பதாக ஓபிஎஸ் தரப்பினர் காவல்துறையிடம் விளக்கமளித்தனர். இதனையடுத்து, ராயப்பேட்டை காவல் நிலையத்தில், காவல் இணை ஆணையர், வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இந்த ஆலோசனைக்குப் பிறகு, கட்சி அலுவலகத்துக்கு வந்த வருவாய் கோட்டாட்சியார் அங்கு நடந்த மோதல் குறித்து விசாரணை நடத்தினர். இதன்பிறகு, கட்சி அலுவலகத்துக்குள் இருந்த ஓ.பன்னீர் செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கிருந்து அவர் வெளியேறிய பிறகு அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். 

    அதிமுகவினர் மோதல்; ராயப்பேட்டையில் 144 தடை உத்தரவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....