Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்'வாடா தம்பி வீட்டுக்கு போலாம்'.. ஆட்டை மேய்த்து வீட்டிற்கு அழைத்து வரும் பாசக்கார நாய்

    ‘வாடா தம்பி வீட்டுக்கு போலாம்’.. ஆட்டை மேய்த்து வீட்டிற்கு அழைத்து வரும் பாசக்கார நாய்

    மனிதனுக்குள் இருக்கும் அணைத்து உணர்வுகளும், விலங்குகளுக்கும் உண்டு..அதனால்தானோ என்னவோ நிறைய தருணங்களில் மனிதனை விட ஒருபடி மேலயே சென்று அதன் பாசத்தை அதிகப்படியாகவே வெளிக்காட்டி விடுகிறது. அப்படியான ஒரு வியக்கத்தக்க நிகழ்வுதான் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    இவ்வளவு காலம் மனிதர்கள் மட்டும்தான் செல்லப் பிராணிகளை பொறுப்போடு வளர்ப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மனிதர்களையே மிஞ்சிய நாய் ஒன்று தன் எஜமான் வளர்த்த ஆட்டை பொறுப்போடு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வீட்டிற்கு அழைத்து வரும் நிகழ்வு நம் தமிழ் நாட்டில் அதுவும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நிகழ்ந்துள்ளது.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த நாரை கிணறு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் தனது வீட்டில் மாடு, கோழி ஆகியவற்றுடன் செல்லப் பிராணி நாய் ஒன்றையும் வளர்த்து வருகிறார். அந்த பகுதியில் சில நேரங்களில் ஆடுகள் திருடுபோவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கோவிந்தன் வளர்த்து வரும் ஒரு கருப்பு ஆடு மேய்ச்சலுக்கு செல்லும் போதெல்லாம் அதன் கூடவே செல்லும் வளர்ப்பு நாயும், மேய்ச்சல் முடிந்த பின்பும் அந்த ஆட்டின் கயிறை லாவகமாக வாயில் பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டிற்கு அழைத்து வருகிறது.

    அந்த ஆடு வராமல் முரண்டு பிடிக்கும் போதெல்லாம் ,தன் வாயில் இருக்கும் கயிற்றை விட்டு விடாமல் மிகவும் பாதுகாப்புடன் அழைத்து வந்து வீட்டில் சேர்க்கும் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பார்ப்போரை ரசிக்க வைத்துள்ளது. அடம் பிடிக்க கூடாது …வாடா தம்பி வீட்டிற்கு போகலாம் என்ற தலைப்பில் தற்போது இந்த ஆட்டின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

    7 -ஆண்டுகளாக தொடர்ந்த பாலியல் தொல்லை.. போக்சோவில் கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....