Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்குமா? ஜூலை 11-ம் தேதி தீர்ப்பு

    அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்குமா? ஜூலை 11-ம் தேதி தீர்ப்பு

    அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் நேற்று (ஜூலை 08) நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜூலை 08) விரிவான பதில்மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை என்றும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழு கூட்டத்துக்கு அறிவிப்பு கொடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

    பொதுக்குழு கூட்டத்துக்கு 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 பேர் ஒப்புதல் அளித்துள்ளனர். 82 சதவீத உறுப்பினர்கள் அனுமதி அளித்துள்ளதால், பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் அளிக்கப்பட்டிருந்த பதில் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள சில தகவல்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமாக இருப்பதால் பொதுக்குழு கூட்டம் நடக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    முன்னதாக, அதிமுக பொதுக்குழு கூட்டம் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு தனி நீதிபதியை நாடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அறிவுறுத்தினர். அதன் பெயரில் ஜூலை 11ம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு கூட்டத்தை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், உயர்நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

    இதையடுத்து இரு தரப்பினரின் வாதத்தையும் கேட்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வெள்ளிக்கிழமை (ஜூலை 08) மதியத்துக்கு ஒத்திவைத்திருந்தார்.

    இந்நிலையில், நேற்று மீண்டும் வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை ஜூலை 11ம் தேதி காலை 9 மணிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டுள்ளார்.

    பள்ளிகளில் வேலைவாய்ப்புக்கான பதிவு ரத்து- தமிழக அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....