Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இன்று வரை புதுச்சேரி அரசியல் அதிகாரம் சுதந்திரம் அடையவில்லை - அன்பழகன் பேட்டி!

    இன்று வரை புதுச்சேரி அரசியல் அதிகாரம் சுதந்திரம் அடையவில்லை – அன்பழகன் பேட்டி!

    மத்திய அரசின் ஒரு அடிமை ஆட்சி போன்று புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாகம் உள்ளதாக முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது;

    மத்தியில் தேசிய கட்சியான காங்கிரஸ் -பாஜக எப்போது ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் பாரபட்சமாக நடந்துகொள்கிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பது மக்களின் நீண்ட நெடுநாள் கோரிக்கையாகும்.

    மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப புரட்சி தலைவி அம்மா அவர்கள் வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போது மாநில அந்தஸ்து கேட்டு வற்புறுத்தி கோரிக்கை வைத்தார். அவரை தொடர்ந்து கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்கள் புதுச்சேரி மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாநில அந்தஸ்து வழங்க தொடர்ந்து மாநில அந்தஸ்துக்கு ஆதரவு அளித்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்று புதுச்சேரி மாநில பாஜக தலைவர் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை தொடர்பாக ஒரு குழப்பதை ஏற்படுத்தும் வகையில் இருவேறு கருத்துக்களை கூறியது தவறான ஒன்றாகும்.

    இன்றளவும் நமக்கு மாநில அந்தஸ்து இல்லாததால், நமது விறுப்பத்திற்கு ஏற்ப பட்ஜெட்டை கூட வடிவமைக்க முடியாத சூழல் உள்ளது. மாநில அந்தஸ்து நமக்கு இல்லாததால் நமக்கென்று தனியாக தேர்வு வாரியம் இல்லை. அதனால் புதுச்சேரியை சேர்ந்தவரக்ள் மருத்துவர்களாகவும், விரிவுரையாளர்கள் பள்ளி முதல்வராகவும் தேர்வு செய்யப்படாமல் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அந்த பணிகளுக்காக இங்கு பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

    மத்திய அரசின் ஒரு அடிமை ஆட்சி போன்று புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாகம் உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அரசின் நிர்வாகம் இன்று வரை சுதந்திரம் அடையவில்லை. மாநில அந்தஸ்து இல்லாததால் நமது மாநிலத்தை மத்திய நிதிக்குழுவில் சேர்க்கவில்லை. இதனால் மத்திய அரசின் வரி வசூலில் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. நிதிக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற மாநிலங்களுக்கு 40 சதவீதம் நிதி வழங்கப்படுகிறது.

    80 சதவீதம் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில நிதி உதவி வழங்கப்பட்ட நிலையில் தற்போது 20 சதவீதம் தான் வழங்குகின்றனர். வெளியில் கடன் வாங்கி தான் நிர்வாகத்தை நடத்த வேண்டிய சூழல் உள்ளது.

    எனவே ஒரு திட்டங்களை விரைவாக செயல்படுத்தவும், சட்டமன்றத்தில் அறிவிக்கின்ற நலன் சார்ந்த திட்டங்களை விரைவாக செயல்படுத்தவும் மாநில அந்தஸ்து அவசியமான ஒன்றாகும்.

    மாநில அந்தஸ்து இல்லாததால் துறைமுகம் விரிவாக்கம் கிடப்பில் போடப்பட்டள்ளது. பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தனியாருக்கு தொழிற்சாலை நடத்த அரசு நிலத்தை குத்தகைக்கு கொடுக்க முடியவில்லை. பல விஷயங்களில் நமது மாநிலம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

    மக்களின் எண்ணத்திற்கு ஏற்பதான் மாநில அந்தஸ்து கிடைக்கும் என பாஜக தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார். மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு அவசியமான ஒன்று. எனவே பாஜக தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாநில அந்தஸ்து என்பது அதிமுகவின் பிரதான கொள்கை முடிவாகும்.

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற முதலமைச்சர் ரங்கசாமி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களை டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமர் உள்ளிட்டவர்களை சந்தித்து வலியுறுத்தி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும். அப்போது குறைந்தபட்ட செயல்திட்டங்களை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற முகேஷ் அம்பானி குடும்ப விழா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....