Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுரங்கம்மை: கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

    குரங்கம்மை: கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

    இந்தியாவில் கேரள மாநிலத்தில் முதல் முறையாக குரங்கம்மை பாதிப்பு உறுதியான நிலையில், அம்மாநிலத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு கூடுதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    உலகம் முழுவதும் இதுவரை 3,413 பேர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கேரள மாநிலத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு கூடுதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    திருவனந்தபுரத்தில் ஜூலை 15 அன்று நடைபெற்ற உயர் நிலை ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், 5 மாவட்டங்களில் குரங்கம்மை நோய் பரவலை தடுக்க தொடர்பாக முன் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தெரிவித்தார். 

    மேலும், அவர் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம் திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் குரங்கம்மை பாதிக்கப்பட்டுள்ள நபருடன் ஒரே விமானத்தில் வந்துள்ளார்கள் என்பதால், இந்த கூடுதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

    இந்தியாவுக்குள் நுழைந்தது குரங்கம்மை நோய்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....