Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇரண்டரை ஆண்டுகளில் அதானி தொட்ட உச்சம் - அதிர்ந்து போன உலக பணக்காரர்கள்!

    இரண்டரை ஆண்டுகளில் அதானி தொட்ட உச்சம் – அதிர்ந்து போன உலக பணக்காரர்கள்!

    கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியத் தொழிலதிபர் அதானியின் சொத்து மதிப்பு 13 முறை அதிகரித்துள்ளது. 

    அதானி குழுமத்தின் நிறுவனர் கெளதம் அதானி வேகமான வளர்ச்சி கொண்ட தொழிலதிபராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

    சில நாள்களுக்கு முன்பு ப்ளும் பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில், கௌதம் அதானி 137.4 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். அதவாது, இந்திய ரூபாய் மதிப்பில் இவரது சொத்து மதிப்பு ரூ.10.8 லட்சம் கோடி ஆகும். 

    அதேபோல், கடந்த 2020-ம் ஆண்டு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு அதிவேகமாக உயர்த்து தற்போது, 2022-ம் ஆண்டு 60 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

    அதானியின் சொத்து மதிப்புகள் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளில் 13 முறை உயர்ந்துள்ளன. இதன் காரணமாக, குறுகிய காலத்தில் மிக வேகமாக சொத்துக்களை அதிகரித்த பெரும் பணக்காரர்களின் பட்டியலிலும் அதானி முன்னிலை வகிக்கிறார். 

    உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் ரூ.20 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். அதேபோல், அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ் ரூ.12.4 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்திலும், கெளதம் அதானி மூன்றாவது இடத்திலும், பெர்னார்ட் அர்னால்ட் ரூ.10.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் நான்காவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    யுவனின் இசை மழையில் நனையத் தயாரா? – சென்னையில் இசைத் திருவிழா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....