Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்போலி பத்திரப்பதிவினால் நிலத்தை இழந்த வாணிஸ்ரீ ! மீட்டு கொடுத்து இன்ப அதிர்ச்சி தந்த ஸ்டாலின்...

    போலி பத்திரப்பதிவினால் நிலத்தை இழந்த வாணிஸ்ரீ ! மீட்டு கொடுத்து இன்ப அதிர்ச்சி தந்த ஸ்டாலின்…

    மோசடியாக ஆவணப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து அதற்கான ஆணையை வழங்கியமைக்காக முதலமைச்சருக்கு நடிகை வாணிஶ்ரீ நன்றி தெரிவித்துள்ளார்.

    தலைமைச் செயலகத்தில் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி போலி ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரம் பதிவுத்துறைக்கு வழங்குவதை தொடங்கி மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மேலும், மோசடியாக ஆவணப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து அதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    மோசடியாக ஆவணப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து அதற்கான ஆணைகளை பெறப்பட்ட பயணாளிகளில் ஒருவராக நடிகை வாணிஶ்ரீ-யும் இருந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

    இதையும் படிங்க: இளம் வல்லுநர்களை உருவாக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் தொடக்கம்

    அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    “சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனது 4 கிரவுண்ட் இடம் மோசடியாக ஆவணப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து அதற்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் தனக்கு வழங்கினார்.

    இந்த இடத்திற்காக கடந்த 11 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி, தற்போது இந்த இடம் தனக்கு கிடைத்துள்ளது. இதற்காக முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” 

    இவ்வாறாக பேசினார். 

    மேலும், இதற்கான பட்டாவை ஆன்லைனில் வழங்க வேண்டும் எனவும் நடிகை வாணிஶ்ரீ கேட்டுக்கொண்டார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....