Monday, May 6, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சூரிக்கு ஜோடியாகும் கேரளத்தை கலக்கிய நடிகை!

    சூரிக்கு ஜோடியாகும் கேரளத்தை கலக்கிய நடிகை!

    மலையாள நடிகை அன்னா பென் தற்போது சூரி நடிக்கும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாக உள்ளார்.

    மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், அன்னா பென். கும்பளங்கி நைட்ஸ், கப்பெல்லா, சாராஸ், நைட் டிரைவ், ஹெலன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். 

    அன்னா பென் ரசிகர்கள் மத்தியிலும், திரைத்துறையினர் மத்தியிலும் நல்ல வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறார். ‘ஹெலன்’ திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தி மற்றும் தமிழ் மொழியில் இத்திரைப்படம் ரீமேக்கும் செய்யப்பட்டது. 

    இந்நிலையில், ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட கூழாங்கல் படத்தின் இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் இவர் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளார். 

    vinoth raj

    சமீபத்தில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் பூஜையில் அன்னா பென் மற்றும் சூரி ஆகியோர் கலந்துக்கொண்டனர். இப்படம் மூலம் அன்னா பென் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகிறார். 

    கொம்பு சீவி விடும் விஷயங்கள இளைஞர்களுக்கு கொடுக்க வேணாம் – ஆர்.ஜே. பாலாஜி பேச்சு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....