Tuesday, May 16, 2023
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பண மோசடி வழக்கில் பிரபல நடிகர் மீது குவியும் வழக்குகள்; கைதான தயாரிப்பாளர்! – என்ன...

    பண மோசடி வழக்கில் பிரபல நடிகர் மீது குவியும் வழக்குகள்; கைதான தயாரிப்பாளர்! – என்ன நடக்கிறது?

    பூபதி பாண்டியன் இயக்கத்தில், நடிகர் விமல் நடித்த மன்னர் வகையறா தமிழ் திரைப்படம்,  2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  திரைக்கு வந்தது. திரைப்படம் முழுவதும் காமெடியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில், ஆனந்தி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

    பிரபல தயாரிப்பாளரான சிங்காரவேலன், என்னிடம் 5 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டார் என நடிகர் விமல், கடந்த ஆண்டு காவல் நிலையத்தில் புகார்  அளித்திருந்தார். ஆனால், நடிகர் விமல் தன் மீது அளித்தது பொய் புகார் எனவும், தேவையில்லாமல் பொய் புகார் அளித்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விமல் தனக்குத் தரவேண்டிய பணத்தை பெற்றுத் தரக் கோரியும், இம்மாதம் 22 ஆம் தேதி சென்னையில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சிங்கார வேலன் புகார் அளித்தார்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு விமல் அளித்த புகாரின் அடிப்படையில், மன்னர் வகையறா திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிங்கார வேலனை காவல்துறையினர் இன்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் விமலின் நண்பர்களான கோபி மற்றும் திருநாவுக்கரசு மீதும் 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

    ஏற்கனவே, ‘மன்னர் வகையறா’ திரைப்படத்துக்காக ரூ.5 கோடி பணம் பெற்று மோசடி செய்துவிட்டார் என நடிகர் விமல் மீது சென்னையில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர் கோபி கடந்த வாரம் புகார் மனு அளித்திருந்தார். இந்தப் புகாரை நடிகர் விமல் மறுத்ததோடு, நான் யாரையும் ஏமாற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    இது ஒருபுறம் இருக்க, தயாரிப்பாளர் கணேசனின் மகள், நடிகர் விமல் மீது பண மோசடி புகார் அளித்துள்ளார். இப்புகாரில், 1.73 கோடி ரூபாயை விமல் ஏமாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்து வரும் சம்பவம், திரைத்துறையில் குழப்பத்தையும் விரிசலையும் ஏற்படுத்தி உள்ளது. யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது இனி நடக்கவிருக்கும் காவல் விசாரணையில் தான் தெரிய வரும்.

    இதையும் படிங்க; டெல்லி எய்ம்ஸில் போராட்டம் தொடுத்த செவிலியர்கள்; தவிக்கும் நோயாளிகள்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....