Tuesday, May 16, 2023
மேலும்
  Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தென்னிந்திய திரையுலகம் குறித்து கேஜிஎஃப் வில்லன் சொன்னது இதுதான் - 'அதிரா' எனும் ஆக்ரோஷக்காரன்!

  தென்னிந்திய திரையுலகம் குறித்து கேஜிஎஃப் வில்லன் சொன்னது இதுதான் – ‘அதிரா’ எனும் ஆக்ரோஷக்காரன்!

  கேஜிஎஃப் சாப்டர் 2 – இந்தியா முழுவதும் திரை தீப்பிடிக்கும் அளவிற்கு வீரியத்தன்மையுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளிவந்துள்ள இப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வந்த வண்ணம் உள்ளன. விரைவில் 1000 கோடி எனும் மாபெரும் வசூலை கேஜிஎஃப் நிகழ்த்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

  இத்திரைப்படத்தில் அதிரா எனும் கதாப்பாத்திரம் பலரையும் மிரள வைத்த ஒன்றாகவே இருக்கிறது. ஒரு இந்தியக் கதையில், வைக்கிங் எனும் இனத்தைச் சார்ந்த கதாப்பாத்திரத்தை கொண்டு வருவதே கடினமான ஒன்று. ஆனால், கேஜிஎஃப் இரண்டாம் பாகத்திலோ அப்படியான கதாப்பாத்திர வடிவமைப்பை உருவாக்கி, அதை மக்களிடத்தில் நேரடியாக சேர்த்துள்ளனர் என்பது வியப்புக்குரிய ஒன்றுதான்!

  ‘அதிரா’ எனும் ஆக்ரோஷக்காரனை அதிக அளவிலான காட்சிகளில் காட்டாவிட்டாலும், அந்த காதாப்பாத்திரத்தின் தீவிரத்தன்மை திரைப்படம் முழுவதும் பரவியபடியே இருக்கும் என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

  இந்த அதிரா கதாப்பாத்திரத்தை திறம்பட நடித்தவர்தான் பாலிவுட் நடிகர், சஞ்சய் தத். இந்திய அளவில் சஞ்சய் தத் ஏற்கனவே பரீட்சியம் என்றாலும், அதிரா கதாப்பாத்திரம், இன்னும் பலரிடத்தில் சஞ்சய் தத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில், இனி சஞ்சய் தத் அவர்களை அதிரா என்று அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

  இப்படியாக தற்போதைய சூழல்கள் இருக்க, சஞ்சய் தத் சமீபத்தில் நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அந்த நேர்காணலில் தென்னிந்திய திரைப்படங்களைப் பற்றி பேசியுள்ளார். குறிப்பாக, வட இந்திய திரைப்படங்களுக்கும், தென்னிந்திய திரைப்படங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை அவர் முன்வைத்துள்ளார். 

  சஞ்சய் தத்தின் கூற்றுப்படி, தற்போதைய ஹிந்தி படங்கள் வாழ்க்கையை விட பெரிதான கதையை, ஹிரோயிசத்தை மறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் தென்னிந்திய படங்கள் ஹீரோயிசத்தை மறக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும், “ நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்கள், ரொமான்ஸ் காமெடி படங்கள் மோசமானவை என நான் சொல்ல வரவில்லை. ஆனால் உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஹிரோயிசம் சார்ந்த கதைக்கு  பெரியளவிலான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விட்டோம் ” என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

  ஹிந்தி படங்களில் பழைய ட்ரெண்ட் திரும்பி வரவேண்டும் எனவும் சஞ்சய் தத் குறிப்பிட்டுள்ளார். எஸ்.எஸ்.ராஜமௌலியை முழுமையாக நம்புகிற தயாரிப்பாளர்கள் போலவே பாலிவுட்டிலும் குல்சன் ராய், யாஷ் சோப்ரா, சுபாஷ் கை, யாஷ் ஜோகர் போன்ற தயாரிப்பாளர்கள் இருந்தனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

  “தென்னிந்திய திரைத்துறையில் தாளில் இருக்கும் கதையை பார்க்கிறார்கள், இங்கு எத்தனை இலக்கத்தில் பணம் திரும்ப கிடைக்கும் என பார்க்கிறார்கள்” என்றும்  சஞ்சய் தத் தெரிவித்து இருக்கிறார்.

  இதையும் படிங்க; நயன்தாராவை ‘அடி அழகா சிரிச்ச முகமே ….’ என வருணித்த விக்னேஷ்சிவன்

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....