Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபுள்ளிப்பட்டியலில் முன்னேறப் போவது எந்த அணி? - பட்லர் அதிரடிக்கு பெங்களூர் பதில் தருமா?

    புள்ளிப்பட்டியலில் முன்னேறப் போவது எந்த அணி? – பட்லர் அதிரடிக்கு பெங்களூர் பதில் தருமா?

    இன்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. பெங்களூர் அணி கடந்தப்போட்டியில் 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான தோல்வியை சந்தித்தது. 

    விராட் கோலி, டூ பிளெசிஸ் போன்றோர் தொடர்ந்து சொதப்பி வருவது பெங்களூர் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தினேஷ் கார்த்திக் ஓரளவிற்கு பெங்களூர் அணித்தரப்பில் இருந்து ஆறுதல் தருகிறார். 

    ராஜஸ்தான் ராயல்ஸ் பக்கம் வருவோமாயின், பட்லர் ஒருவரே பேட்டிங்கில் மாஸ் காண்பித்து வருகிறார். இந்த தொடரில் ஏற்கனவே மூன்று சதங்களை அடித்துள்ளார், பட்லர்! சஞ்சு சாம்சனும் சிறப்பாக செயல்பட, ராஜஸ்தான் ராயல்ஸ் சிறப்பான அணியாகவே விளங்கி வருகிறது. 

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஹால் மிக முக்கியமான வீரர் என்றாலும் இன்றையப் போட்டியில் அவர் மேலும் முக்கியமானவராக கருதப்படுவார். காரணம், சஹால் பெங்களூர் அணியின் முன்னாள் வீரர். அதேப்போல், பெங்களூர் அணியில் இடம்பெற்றிருக்கும் அனுஜ் ராவத் இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்தவர்.

    ஆனால், பெங்களூர் அணியானது அனுஜ் ராவத்தை இன்றைய ஆட்டத்தில் இருந்து கழட்டி விட அநேக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. மேலும், தனது பேட்டிங் திறமையை பெங்களூர் அணி வெளிக்கொணரும் வரையில் வெற்றிக்கனியை பெங்களூர் பறிப்பது என்பது இயலாத காரியம்.

    பெங்களூர் அணியும், ராஜஸ்தான் அணியும் இதுவரை நேருக்கு நேர் மோதியதில், பெங்களூர் அணி 13 முறையும், ராஜஸ்தான் அணி 10 முறையும் வெற்றியை பதிந்துள்ளது. 

    இன்றையப் போட்டியில் எந்த அணி வெற்றிப் பெற்றாலும், புள்ளிப்பட்டியிலில் மாற்றங்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணி வெற்றிப் பெற்றால் 5 ஆவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு சென்று விடும். ராஜஸ்தான் அணியும் இன்று வெற்றிப்பெற்றால் ரன் ரேட்டை பொறுத்து முதலிடம் மற்றம் இரண்டாம் இடத்திற்கு முன்னேறும்!

    இரு அணிகளுக்கும் இடையே நடைபெற இருக்கும் இப்போட்டியானது, மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோஷியேன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்றையப் போட்டியானது இரவு 7:30 மணியளவில் தொடங்க இருக்கிறது. 15 ஆவது ஐபில் தொடரின் 39 ஆட்டமாக இந்த ஆட்டம் இருக்கிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....