Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தளபதி விஜய் சொன்ன இந்த விஷயத்தால், அதிர்ச்சியில் ரசிகர்கள்..

    தளபதி விஜய் சொன்ன இந்த விஷயத்தால், அதிர்ச்சியில் ரசிகர்கள்..

    வருகிற 13 -ஆம் தேதி பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும், பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் படக்குழு சுமாராகவே பீஸ்ட் திரைப்படத்தை புரோமஷன் செய்து வருகின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் விரக்தி நிலை காணப்பட்டு வந்தது. ஆனால், நேற்று நடந்த ஒரு நேர்காணல் விரக்தியில் இருந்த விஜய் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியது.

    ஆம்! தளபதி விஜய் அவர்களின் நேர்காணல் நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதுதான் ரசிகர்களின் குதூகலத்திற்கு காரணமாக அமைந்தது. பத்து வருடங்களுக்குப் பிறகு விஜய் அவர்கள் தந்துள்ள இந்த நேர்காணலானது பலரின் ஆவலையும் முன்பே சம்பாதித்து வைத்திருந்தது. அந்த ஆவலினூடேதான் பலரும் நேற்று விஜய்யுடன் நேருக்கு நேர் என்ற நேர்காணலை கண்டனர். இந்த நேர்காணலை தொகுத்து வழங்கியவர், பீஸ்ட் திரைப்படத்தின் இயக்குநர், நெல்சன் தீலிப்குமார். 

    இந்த நேர்காணலின் போது, நெல்சன் திலீப்குமார் கேட்ட பல கேள்விகளுக்கு விஜய் அவர்கள் அளித்த பதில்கள் மிகவும் சுவார்ஸ்யமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது. பத்து, பதினொரு வருடங்களுக்கு முன்பு விஜய் அவர்கள் தந்த ஒரு எழுத்துப்பூர்வ நேர்காணலில், விஜய் ஒன்று சொல்ல அது எழுத்து நடையில் வேறு மாதிரியாக எழுதப்பட்டு வெளிவந்ததால்தான் கடந்த பத்து வருடங்களாக விஜய் அவர்கள் எந்தவித நேர்காணலிலும் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தார். இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

    தளபதி-66

    மேலும், பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் அவர்கள் இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிக்கவிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி-66 என பெயர்ச்சூட்டி படப்பிடிப்பை படக்குழு ஆரம்பித்துள்ளது. இத்திரைப்படம் குறித்து வெளிவந்துள்ள கூற்றுகளின்படி, தளபதி-66 திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பை -லிங்குவல் முறையில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இதனால் விஜய் அவர்களுக்கு இருக்கும் தெலுங்கு ரசிகர்கள் மிகவும் ஆனந்தத்தில் இருந்தனர். ஆனால், தற்போது அவர்களுக்கு ஒரு சோக செய்தியை தந்து அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார், விஜய்.

    ஆம்! தளபதி-66 திரைப்படமானது தமிழ் மொழியில் மட்டுமே உருவாகக்கூடிய திரைப்படமென்று விஜய் அவர்கள் இந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். மேலும், வழக்கம்போல் இத்திரைப்படமானது தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று தெரிவித்தார். 

    மொழிமாற்றம் செய்யப்படாமல் நேரடியான தமிழ் படமாக மட்டுமல்லாமல், நேரடி தெலுங்கு திரைப்படமாகவும் தளபதி-66 இருக்கும் என்று எண்ணியவர்களுக்கு இச்செய்தி அதிர்ச்சியானதாகவே பார்க்கப்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....