Friday, March 22, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அட்லீ வீட்டு விஷேசத்தில் கலந்துக்கொண்ட நடிகர் விஜய்..

    அட்லீ வீட்டு விஷேசத்தில் கலந்துக்கொண்ட நடிகர் விஜய்..

    இயக்குநர் அட்லீயின் மனைவி பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தார். 

    2013-ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகாமனவர், அட்லீ. இதைத்தொடர்ந்து, இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற திரைப்படங்கள் வெளிவந்து பெரிய அளிவில் ஹிட் அடித்தது. இதனால் இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநர்களுள் ஒருவராக அட்லீ உருவெடுத்துள்ளார். 

    இதனிடையே ராஜா ராணி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, தனது நீண்ட நாள் நண்பரான நடிகை ப்ரியாவை 2014-ஆம் ஆண்டு அட்லீ திருமணம் செய்துக்கொண்டார். 

    இந்நிலையில், சமீபத்தில் ப்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் கர்ப்பமாக உள்ளேன். அனைவருடைய ஆசிர்வாதங்களும் தேவை என்று கூறியிருந்தார். மேலும், இயக்குநர் அட்லீயும் ‘எங்கள் குடும்பம் வளர்ச்சி அடைகிறது என்பதை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி’ என்று தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    இதைத்தொடர்ந்து, பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துக்கொண்டு அட்லீ-பிரியா தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தார். 

    இது சமந்தமான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அட்லீ தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. 

    மேலும், நடிகர் விஜய்யின் 68-ஆவது திரைப்படத்தை அட்லீ இயக்கவுள்ளதாக தகவல்கள் தற்போது வெளிவந்தது. 

    ஆண்ட்ரியா – தமிழ் சினிமாவின் ஆர்டிஸ்ட்!… பிறந்தநாள் ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....