நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார்.
தமிழ்த் திரையுலகில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த குணச்சித்திர நடிகராக, நகைச்சுவை நடிகராக விளங்கி வருபவர் வடிவேலு. இவரின் நடிப்பில் இரு மாதங்களுக்கு முன்பு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ வெளியான நிலையில், மாமன்னன், சந்திரமுகி-2 போன்ற படங்கள் ரீலிஸூக்கு தயாராகியுள்ளன.
இந்நிலையில், மதுரை வீரகனூரில் வசித்து வந்த வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 87.
இதைத்தொடர்ந்து, வடிவேலு தாயாரின் மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சாலையில் கட்டிப் பிடித்த படியே சென்ற காதல் ஜோடி! வைரலான காணொளி