Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ரசிகரின் பைக்கிற்கு பஞ்சர் ஒட்டி கொடுத்த அஜித்! வைரலாகும் புதிய 'மெக்கானிக்' அவதாரம்...

    ரசிகரின் பைக்கிற்கு பஞ்சர் ஒட்டி கொடுத்த அஜித்! வைரலாகும் புதிய ‘மெக்கானிக்’ அவதாரம்…

    நடிகர் அஜித்குமார் பைக்கிற்கு பஞ்சர் ஓட்டும் வீடியோவானது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. 

    தென்னிந்திய நடிகர்களுள் மிக முக்கியமான ஒருவர், அஜித்குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வலிமை திரைப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆயினும் வசூலில் பெரும் வேட்டையை நிகழ்த்தியது. இந்நிலையில், வலிமை திரைப்படத்தை தொடரந்து அஜித்குமார் மீண்டும் போனி கபூர் தயாரித்து எச்.வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் இத்திரைப்படத்திற்கு துணிவு எனப் பெயரிடப்பட்டது. 

    படப்பிடிப்பின் போது, அஜித்குமார் சமீபத்தில் லடாக்கிற்கு பைக்கில் சென்றிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு வீடியோ அஜித்குமார் பயணம் தொடர்பாக வெளிவந்துள்ளது.

    வீடியோவின்படி, லடாக்கில் பஞ்சர் ஆகி நின்ற ஒருவரின் பைக்குக்கு அஜித்குமாரே பஞ்சர் ஓட்டுகிறார். முறையாக, இருக்கின்ற உபகரணங்களை வைத்துக்கொண்டு நடிகர் அஜித்குமார் பஞ்சர் ஓட்டுகிறார். இதை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து குதூகலித்து வருகின்றனர்.

    முன்னதாக, வெளிவந்த வீடியோவில் கோவையில் இருந்து வந்த இளைஞர்கள் உங்களை 3 நாட்களாக தேடிக் கொண்டிருந்ததாக கூறுகின்றனர். இதைக் கேட்ட அஜித், தேடிட்டு இருந்தீங்களா. நான் என்ன கொலகாரனா கொள்ளக் காரனா என்று கிண்டலாக கேட்கிறார். அதன்பின்னர் அவர்களின் பயண விபரங்கள் குறித்து கேட்பது காட்சிகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ‘நானே வருவேன்’ முதல் நாள் வசூல் இவ்வளவா? பாராட்டிய தயாரிப்பாளர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....