Sunday, March 26, 2023
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மாஸா, ஸ்டைலிஷா இருக்கும் நம்ம அஜித்குமார்! ஏகே61 காதாப்பாத்திரமும் இதுதானாம்!

    மாஸா, ஸ்டைலிஷா இருக்கும் நம்ம அஜித்குமார்! ஏகே61 காதாப்பாத்திரமும் இதுதானாம்!

    அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்து பல சாதனைகளையும் கொண்டாட்டங்களையும் நிகழ்த்திய திரைப்படம்தான், வலிமை. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய எச். வினோத் அவர்கள் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

    valimai 24

    வலிமை வெளியான நாள் கொண்டாட்ட நாளாக அமைந்ததை எவராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. அஜித் ரசிகர்கள் இரண்டு வருடங்களுக்கு மேலாக காத்திருந்ததுக்கான பலன் வலிமை வாயிலாக கிடைத்தது என்றே கூறலாம்.

    வலிமை திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இச்சமயத்திலேயே, அஜித்குமார் அவர்களின் அடுத்த திரைப்படம் குறித்து எதிர்ப்பார்ப்பு ஆரம்பித்துவிட்டது. அஜித்குமார் அவர்கள் நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கு ஏகே61 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை வலிமை திரைப்படத்தை இயக்கிய எச்.வினோத் அவர்களே இயக்குவார் என்றும், வலிமை திரைப்படத்தை தயாரித்த போனி கபூர் அவர்களே இத்திரைப்படத்தை தயாரிப்பார் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    valimai

    இந்நிலையில் அஜித்குமார் அவர்களின் புதல்வனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது குடும்பத்துடன் அஜித்குமார் அவர்கள் பிறந்தநாள் கொண்டாடியப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன. இப்புகைப்படங்களில் அஜித்குமார் அவர்கள் இருக்கும் தோற்றம் அனைவரையும் கவர்ந்த வண்ணம் உள்ளது. அஜித்குமார் அவரது மனைவி ஷாலினியுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் பிரத்யேக கவனம் பெற்று வருகிறது.

    மேலும், அஜித்குமார் அவர்களின் தற்போதைய தோற்றம் ஏகே61 திரைப்படத்திற்கானது என்று அனைவரும் அறிய, அஜித்குமார் அவர்களின் கதாப்பாத்திரம் குறித்து கேள்வி எழும்பியுள்ளது. கேள்விக்கு பதில்கள் சரிவர கிடைக்கவில்லை என்றாலும், எதிர்மறை கதாப்பாத்திரத்தில் அஜித்குமார் நடிக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    yuvaraj

    சூர்யகுமார் யாதவ் மீது எழும் விமர்சனங்கள்; ஆதரவு தந்த யுவராஜ் சிங்

    ஆஸ்திரேலியாக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை டக் அவுட் ஆன இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி...