Friday, March 31, 2023
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஒன்பது வருடங்களுக்கு பிறகு தனது முதல் விக்கெட்டை வீழத்திய பிரபல கிரிக்கெட் வீரர்!

    ஒன்பது வருடங்களுக்கு பிறகு தனது முதல் விக்கெட்டை வீழத்திய பிரபல கிரிக்கெட் வீரர்!

    நம் வாழ்வில் ஏதோ ஒரு செயலை நாம் விருப்பப்பட்டு செய்வோம். அந்த ஒரு செயல் நம் வேலை என்றானப்பின் அதன் மீதான விருப்பம் அதிகரிக்க தொடங்கும். ஆனால், தீடிரென்று அந்த செயல், நமக்கு எல்லாமுமாக இருந்த அந்த வேலை பறிபோய் விட்டால் நேரும் துயரம் அதிகம்தானே! உங்கள் வாழ்வின் அர்த்தமென்று நீங்கள் நினைக்கும் ஒரு செயலை எதோ ஒரு காரணத்தினால் பல வருடங்கள் செய்யாமல் இருப்பது வேதனைதானே!

    sri santh இப்படியான துயரத்தை அனைவருக்கும் தெரிய ஏற்றவர்தான், இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீ சாந்த். கேரளா மாநிலத்தை சார்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீ சாந்த் அவர்கள் 2013 ஆம் ஆண்டு இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருக்கும்போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இப்புகாரின் பேரில் ஸ்ரீ சாந்த் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, விசாரணையின் முடிவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்ரீ சாந்த் அவர்களுக்கு கிரிக்கெட் விளையாட ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது.

    sri santh test match

    இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ சாந்த் அவர்கள் மேல்முறையீடு செய்ய ஆயுட்கால தடை, ஏழு வருடங்களாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஸ்ரீ சாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒன்பது வருடங்களுக்கு பிறகு நான் எடுத்த முதல் விக்கெட் என்று ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார்.

    இக்காணொளியானது, பலரையும் கவர்ந்து வருவதோடு, ஸ்ரீ சாந்த் அவர்களுக்கு பலரின் வாழ்த்தையும் பெற்றுத் தந்த வண்ணம் உள்ளது.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    fssai announcement

    தயிர் பாக்கெட்டில் இந்தி கட்டாயம் என்று அறிவிப்பை திரும்பப்பெற்ற உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம்

    தயிர் பாக்கெட்டில் இந்தி கட்டாயம் என்று அறிவிப்பை இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் திரும்பப்பெற்றது.  தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ என்ற இந்தி வார்த்தை கட்டாயம் இடம்பெற வேண்டும் என இந்திய உணவு தர...