Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா? ரசிகரை கலாய்த்த அஜித்தின் வைரல் வீடியோ

    நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா? ரசிகரை கலாய்த்த அஜித்தின் வைரல் வீடியோ

    நடிகர் அஜித்குமார் காணொளி பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    தென்னிந்திய நடிகர்களுள் மிக முக்கியமான ஒருவர், அஜித்குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வலிமை திரைப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆயினும் வசூலில் பெரும் வேட்டையை நிகழ்த்தியது. இந்நிலையில், வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் போனி கபூர் தயாரித்து எச்.வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். 

    இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக ஏகே-61 என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்காக அஜித்குமார் இருக்கும் தோரனை அஜித் ரசிகர்களை மட்டும் இன்றி, அனைத்து தமிழ் திரையுலக ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்து வருகிறது. இந்த  ஏகே-61 திரைப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். இவர் முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தில் நடித்திருப்பார். 

    ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வரும் மஞ்சு வாரியர், அஜித்தின் பைக் ரேஸ் குழுவுடன் இணைந்து இமயமலைக்கு பயணித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் யூனியன் பிரதேசத்தில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அஜித் மற்றும் அவரது நண்பர்கள் குழுவுடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியரும் பயணம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

    இதையும் படிங்க: அவளை கண்ட உயிரற்ற கல்லுக்கே இந்த நிலைமை? – சீதா ராமம் பாடல் ஒரு பார்வை!

    இந்நிலையில், தற்போது அஜித்குமார் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் போது அவரைக் கண்ட இளைஞர்கள் அவருடன் பேச முற்பட்டனர். இதைச் சார்ந்த காணொளி ஒன்று தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

    காணொளியின்படி, கோவையில் இருந்து வந்த இளைஞர்கள் உங்களை 3 நாட்களாக தேடிக் கொண்டிருந்ததாக கூறுகின்றனர். இதைக் கேட்ட அஜித், தேடிட்டு இருந்தீங்களா. நான் என்ன கொலைகாரனா கொள்ளைக்காரனா என்று கிண்டலாக கேட்கிறார். அதன்பின்னர் அவர்களின் பயண விபரங்கள் குறித்து கேட்கிறார் அஜித். இந்த காணொளியானது தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....