Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்திரைத்துறையிலிருந்து விலகுவதாக கூறிய அமீர்கான் - நடந்தது என்ன?

    திரைத்துறையிலிருந்து விலகுவதாக கூறிய அமீர்கான் – நடந்தது என்ன?

    பிரபல நடிகர் அமீர்கான் திரைத்துறையை விட்டு விலகுவதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரையுலகின் மிக முக்கியமான நடிகராக பாரக்கப்படுபவர், அமீர்கான். இவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 

    செய்தி நிறுவனம் ஒன்றின் தொடக்க விழாவில் சமீபத்தில் அமீர்கான் கலந்துக்கொண்டார். அப்போது அவர் ‘புதிய கதை – புதிய தொடக்கங்கள்-பொழுதுபோக்குகளை மறுசீரமைத்தல்’ என்ற தலைப்பை முன் வைத்து பேசினார். 

    அமீர்கான் பேசியது 

    இந்நிகழ்வின்போது அமீர்கான் பேசியது, பலரையும் உணர்ச்சிவசத்தில் ஆழ்த்தியதோடு சிந்திக்கவும் தூண்டியது. அதே சமயம் அவரின் ரசிகர்களைக் கவலை அடையவும் செய்தது. 

    ஆம்! இந்நிகழ்வில் அமீர்கான் அவர்கள், நான் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்ற எனது கனவுகளைத் துரத்தி அவற்றை நிறைவேற்ற முயற்சிப்பதில் என் வாழ்நாளைக் கழித்ததாக உணர்கிறேன் என்றும், இந்தப் பயணத்தின் போது, ​​என் அன்புக்குரியவர்களை நான் கவனிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

    குறிப்பாக எனது பெற்றோர், எனது உடன்பிறந்தவர்கள், எனது குழந்தைகள், எனது முதல் மனைவி ரீனா, எனது இரண்டாவது மனைவி கிரண், அவர்களின் பெற்றோர் போன்றோருக்கு என்னால் அவர்களுக்கு போதுமான நேரத்தை ஒதுக்க முடியவில்லை எனவும் அமீர்கான் தெரிவித்தார். 

    அவர் மேலும், என் மகளுக்கு இப்போது வயது 23 என்றும் இதுவரையிலான அவள் வாழ்வில், என் இருப்பை அவள் தவறவிட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அவளுக்கு அவளுடைய சொந்த கவலைகள், அச்சங்கள், கனவுகள் மற்றும் நம்பிக்கைகள் இருந்தன ஆனால் நான் அவளுக்காக இல்லை. இது எனக்கு இப்போது தெரியும் என்றும் அமீர்கான் தெரிவித்தார். 

    அவளுடைய கனவுகள் மற்றும் அச்சங்கள் மற்றும் நம்பிக்கைகள் எனக்குத் தெரியாது, ஆனால் எனது இயக்குநர்களின் அச்சங்கள் மற்றும் கனவுகள் மற்றும் நம்பிக்கைகள் எனக்குத் தெரியும் என்று அமீர்கான் கூறியது பலரை உணர்ச்சிவசத்தில் ஆழ்த்தியது. 

    அமீர் மேலும் கூறுகையில், “ஒரு மனிதனிடம் இருக்கும் மிக முக்கியமான வளம் நேரம் என்பதை ஊரடங்கின் போது நான் உணர்ந்தேன். ஒரு நாள் நேரம் தீர்ந்துவிடும் என்று நமக்குத் தெரியும், ஆனால் அது எப்போது என்று நமக்குத் தெரியாது. 

    இதைப் பற்றி எனக்கு ஒரு கூர்மையான உணர்வு இருந்தது, மேலும் நான் என் வாழ்க்கையை ஒருவித மயக்கத்தில் வாழ்ந்தேன், இதனால் நான் நிறைய இழந்தேன்” என்றார், அமீர்கான். 

    குழந்தைகள் வளர்ப்பு 

    “நம் குழந்தைகளை, நாம் எப்படி வளர்க்கிறோம் என்பது மிக முக்கியம், ஏனென்றால் அவர்கள் மூலம் நாம் ஒரு தேசத்தை உருவாக்குகிறோம். ஒரு குழந்தை பாதுகாப்பாக உணர வேண்டும், மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும், தாழ்த்தப்பட்டதாக உணரக்கூடாது, எல்லா நேரங்களிலும் குழந்தைகள் அன்பாக உணர வேண்டும்,” என்று கூறியவர், தங்கள் குழந்தைகளை சரியான மதிப்புகளுடன் வளர்ப்பதே தங்கள் தேசத்திற்கு ஒருவர் செய்யக்கூடிய மிகப்பெரிய பங்களிப்பு என்றும் தெரிவித்தார். 

    நான் எனது குடும்பத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்றும், மேலும் எனது பார்வையாளர்களை நோக்கி அவர்களின் இதயங்களை வெல்ல விரும்பினேன் என்றும், நான் என் பார்வையாளர்களுடன் சிரித்து அழுதேன், ஆனால் என் குடும்பத்திற்காக நான் இல்லை என்றும் அமீர்கான் தெரிவித்தார். 

    விலகல் 

    மேலும், இவற்றையெல்லாம் கூறிய அமீர்கான் திரைப்படத் துறையை விட்டு வெளியேற முடிவு செய்ததாகக் கூறினார். அதன்பிறகு அமீர்கானின் குழந்தைகளும் அவரது மனைவி கிரணும் இம்முடிவை மறுபரிசீலினை செய்ய வைத்ததாக கூறினார். அதன்படி, அமீர்கான் தற்போது திரைப்படத்துறையை விட்டு விலகுவதாக இல்லை என்பது புலப்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....