Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்குடும்பத்துடன் சுற்றுலா போயிருக்கிறார் ஸ்டாலின் : எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

    குடும்பத்துடன் சுற்றுலா போயிருக்கிறார் ஸ்டாலின் : எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

    தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டை ஈர்க்கப்போகிறேன் என்ற போர்வையில், தன் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார் மு.க.ஸ்டாலின் என்று கடுமையாக சாடியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. 

    சேலம் மாவட்டத்தில் அதிமுக கட்சிக்கான அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்தல் பணிகள் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. 37 ஒன்றியங்கள், 33 பேரூராட்சிகள் மற்றும் 6 நகராட்சிகளுக்காக இந்த தேர்தல் நடைபெறுகிறது. 

    இந்த தேர்தல் பணிகளை நேரில் பார்வையிட வந்திருந்த முன்னாள் முதல்வரும் தற்போதைய அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை நேரில் சந்தித்து பேசினார். 

    துபாய்க்கு பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் தமிழ்நாடு அரங்கினை சர்வதேச கண்காட்சியில் தொடங்கி வைக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் சென்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது. முதல்வருடன் தொழில்துறை அமைச்சர், செயலர் மற்றும் அதிகாரிகள் சென்றது நியாயமானது. ஆனால், குடும்பத்தினரை அழைத்துச் சென்றது எவ்விதத்தில் சரி என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

    மேலும், துபாய் சென்றது தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கவா ? அல்லது குடும்பத்துக்கு புதிய தொழில் தொடங்கவா ? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் எனவும் கூறியுள்ளார். இது பொதுமக்களால் ஒரு குடும்ப சுற்றுலாவாகவே பார்க்கப்படுகிறது என்றும் கூறினார். 

    இன்னும் ஒருசில தினங்களில் கண்காட்சி முடிவடையும் நிலையில் துபாய் சென்றிருப்பது வேடிக்கையாக உள்ளது. இதை ஒரு காரணமாக வைத்து குடும்ப சுற்றுலா சென்றுள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தன்னுடைய வெளிநாட்டு பயணம் பற்றி விவரித்த அவர், 

    நான் வெளிநாடு செல்லும் போது பயணிகள் விமானத்தில் மட்டும் சென்றேன். என்னுடன் துறைசார்ந்த அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் மட்டுமே உடன் இருந்தனர். அவர்களுடன் லண்டன் சென்றிருந்தபோது அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்துவதற்கான முறைகள் குறித்து ஆலோசனை செய்யயப்பட்டன. 

    லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை போலவே நம் மாநில மருத்துவமனைகளை மாற்றுவது குறித்த ஆலோசனைகளும் வழக்கப்பட்டன என்று எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டார். 

    அப்போது எங்களை அமைச்சர்களுடன் சுற்றுலா சென்றுள்ளதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின் இப்பொழுது தன் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். நாங்கள் சென்று வந்ததன் அடிப்படையில் தான் தலைவாசலில் மிகப்பெரிய கால்நடைப்பூங்கா அமைக்கப்பட்டது. மின்சார வாகன கொள்கை உருவாக்கப்பட்டு அது சார்ந்த தொழில்கள் தொடங்கின. உலக தொழிலாளர் மாநாட்டின் மூலம் இங்கு பல தொழில்கள் தொடங்கப்பட்டன. இவையெல்லாம் நான் தொடங்கி வைத்த திட்டங்கள். இப்பொழுது இதையெல்லாம் அவர் செய்வது போல அவர் காட்டிக்கொள்கிறார். ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் அவருடைய வேலை என கடுமையாக சாடியுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....