Wednesday, May 1, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்வானத்தில் வாழ்க்கை: கண்முன் தோன்றும் வருங்காலம் !!

    வானத்தில் வாழ்க்கை: கண்முன் தோன்றும் வருங்காலம் !!

    சமீப காலமாக சமூக வலைதளங்களில் அதிக பேசுபொருளாக மாறிய ஒரு விமானமும், தற்போது உலகம் முழுவதும் பிரபலம் ஆகி வருகிறது. இந்த விமானமானது ஒரு உணவகமாகும். சுமார் ஒரு வருடத்துக்கு வானிலேயே பறந்து கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானமானது பலரிடையே ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

    அறிவியல் புனைவுக் கதைகளிலும், கார்ட்டூன் நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் மட்டுமே அறிமுகமாகி இருந்த இந்த வகை பறக்கும் உணவகங்கள் தற்போது நிஜ உலகத்திலும் சாத்தியமாவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

    ஹஷேம் அல்-கய்லி எனப்படும் வரைகலை (graphics) நிபுணர் பறக்கும் உணவகத்தின் காணொளியினை வடிவமைத்துள்ளார். தனது யூடியூப் பக்கத்தில் இந்த காணொளியினைப் பகிர்ந்துள்ள அல்-கய்லி இந்த உணவகத்தினை, ‘வான் கப்பல்: வானத்தின் மீது மிதக்கும் வருங்கால உணவகம்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    சுமார் ஒரு வருடம் வரை வானத்தில் வலம் வரும் இந்த ‘வான் உணவகத்தில்’ 5,000 பேர் வரை பயணிக்கலாம். ஒரு நீண்ட சுற்றுலாவினை விரும்பும் நபர்களுக்கு இந்த வான் உணவகத்தில் பயணிப்பது கட்டாயம் மகிழ்ச்சியினை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

    அல்-கய்லி பகிர்ந்துள்ள இந்த காணொளியின் இறுதியில் விமானத்தினை வடிவமைத்தவரான டோனி ஹோல்ம்ஸ்டெனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. டோனி, படங்கள், அனிமேஷன், வீடியோ கேம்களில் தனது திறமையினை வெளிப்படுத்தி வருபவராவார். இந்த வான் உணவகமானது அணுசக்தியில் இயங்கும் என்பது கூடுதல் தகவல்.

    யூடியூபில் பகிர்ந்த இந்த காணொளிக்கு கடந்த சில நாட்களாக பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. பலரும் தங்களது கருத்தினைப் பதிவு செய்து வருகின்றனர். இதுவரை இந்த காணொளியினை ஏழு லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். இந்த விமானத்தின் வடிவமைப்பினைப் பற்றி பலரும் பாராட்டும் விதத்தில் கருத்து தெரிவித்தாலும், சிலர் சந்தேகமான முறையில் கருதி வருகின்றனர்.

    ‘உலக மக்களிடையே வன்முறைகள் வெடிக்கும்போது பணக்காரர்கள், தங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இந்த விமானத்தினை உபயோகப்படுத்தப் போகிறார்கள். நாம் எல்லோரும் சண்டை போட்டுக்கொண்டிருக்க, அவர்கள் நமக்குத் தெரியாத வண்ணம் தங்களை மறைத்துக் கொள்ளப்போகிறார்கள்.’ என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். 

    இந்த விமானம் வருங்காலத்தில் நடைமுறைக்கு சாத்தியமானால், அதன்மூலம் மனிதகுலம் பல்வேறு நன்மைகளைப் பெரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

    இலங்கையில் நிலைமை மோசம்: பஞ்சத்தில் மக்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....