Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா8 மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் எக்ஸ்பிபி வகை...பரவியது எப்படி?

    8 மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் எக்ஸ்பிபி வகை…பரவியது எப்படி?

    தமிழகம், கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் எக்ஸ்பிபி வகை பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதன்படி தமிழகத்தில் 52 பேருக்கும், ஒடிசாவில் 35 பேருக்கும், மேற்கு வங்கம் மற்றும் மராட்டியத்தில் தலா 17 பேருக்கும், தலைநகரனான தில்லி மற்றும் கர்நாடகத்தில் தலா 6 பேருக்கும் குஜராத்தில் 2 பேருக்கும் ராஜஸ்தானில் ஒரு நபருக்கும் எக்ஸ்பிபி வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    நாட்டில் இதுவரை பிஏ.2.75 வகை உருமாறிய கொரோனா வைரஸ் தான்வேகமாக பரவி வருகிறது. 

    இந்நிலையில், இப்போது கொரோனா தோற்று உறுதி செய்யப்படும் நபர்களில் 20 சதவீதம் பேர் எக்ஸ்பிபி வகை வைரஸால் பாதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இந்த எக்ஸ்பிபி வகை உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், இந்த வகையில் பல வகையான மாறுபாடுகள் உள்ளது எனவும், இதில் சில வகைகள் சிங்கப்பூர், வங்க தேசம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க் போன்ற நாகுகளிலும் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: இந்தியாவில் புதிதாக இன்று 1,326 பேருக்கு உறுதியான தொற்று…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....