Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்நடைப்பயிற்சி மேற்கொண்ட மணக்குள விநாயகர் கோவில் யானை கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!

    நடைப்பயிற்சி மேற்கொண்ட மணக்குள விநாயகர் கோவில் யானை கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!

    புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென கீழே விழுந்து பறிதாபமாக உயிரிழந்தது புதுச்சேரி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பக்தர்கள், பொதுமக்கள் யானைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    1995-ஆம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி என்ற யாணை புதுச்சேரியில் உள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை விநாயகருக்கு சேவை செய்தும், பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கி வந்தது.

    மேலும் புதுச்சேரி மக்களிடமும் பொதுமக்களிடமும் அன்பாக பழகக்கூடியது. பாசத்திற்குரிய பழகுவதற்கு இனிமையான நல் உள்ளம் கொண்ட யாணை லட்சுமி வழக்கம் போல் இன்று விடியற்காலை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனது இருப்பிடத்திலிருந்து நடை பயிற்சிக்காக வெளியே சென்றது. கல்வே காலேஜ் அருகே நடந்து சென்ற போது திடீரென யானை லட்சுமி மயங்கி கீழே விழுந்தது. மருத்துவர்களும், யானை பாகனும்பல முயற்சிகள் எடுத்தும் பலனில்லை.

    யானை லட்சுமி பறிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த அமைச்சர் லட்சுமிநாராயணன் யாணைக்கு அஞ்சலி செலுத்தி கோவிலுக்குல் எடுத்துச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் உயிரிழந்த யானை லட்சுமிக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் கண்ணீர்விட்டு அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அமைச்சருக்கே வந்த சோதனை! லிப்டில் சிக்கிக் கொண்ட பரிதாபம் !

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....