Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதிருமலா விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து

    திருமலா விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து

    திருப்பதி ரயில் நிலையத்தில், திருமலா விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

    ஆந்திர மாநிலம், திருப்பதியில் உலகப் புகழ்ப்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிர கணக்கில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் ரயில் மற்றும் பேருந்து பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ரயில் பயணம் பட்ஜெட்டில் அடங்குவதால் அதையே பலரும் விரும்புகின்றனர். 

    இந்நிலையில், விசாகப்பட்டினத்திலிருந்து திருமலை விரைவு ரயில் இன்று காலை திருப்பதி ரயில் நிலையத்திற்கு வந்தது. இதையடுத்து பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து வெளியேறத் தொடங்கினர். இதனிடையே ரயிலின் எஸ் 6 முன்பதிவு பெட்டியில் கழிவறையின் மேல் பகுதியில் திடீரென தீப்பிடிப்பு ஏற்பட்டது. இதனைக் கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். 

    இதையடுத்து விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் தீயினை அணைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கழிவறையில் இருந்த சிகரெட் துண்டுகளால் தான் தீ விபத்து ஏற்பட்டது என கண்டறியப்பட்டது.

    இந்தச் சம்பவத்தின் போது, திருமலா ரயிலில் இருந்த பயணிகள் வெளியேறிக் கொண்டிருந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டதால், பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    நடைபயிற்சி மேற்கொண்ட மணக்குள விநாயகர் கோவில் யானை கீழே விழுந்து பரிதமாக உயிரிழப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....