Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்துறைவாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்; அமைச்சர் எ.வ.வேலு

    துறைவாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்; அமைச்சர் எ.வ.வேலு

    பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அலகு வாரியாக ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் துறையின் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    ரயில்வே மேம்பாலம், ஆற்றுப்பாலம், புறவழிச்சாலை, உயர்மட்டச்சாலை என துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானத்திற்கு முந்தைய பணிகள், கட்டுமானப்பணிகள், நில எடுப்பு பணிகள், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    நெடுஞ்சாலை துறையில் நடைபெற்று வரும் 129 கட்டுமானப்பணிகள், 9 நில எடுப்பு பணிகள், 56 விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள், 130 கட்டுமானத்திற்கு முந்தைய நிலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதேபோல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் 19 திட்ட ரயில்வே பால பணிகள் குறித்தும், எவ்வளவு பணிகள் முடிந்துள்ளது, மீதமுள்ள பணிகளை முடிப்பதற்குரிய காலக்கெடு, அதற்கான இடர்பாடுகள் என்ன, அதனை சரிசெய்வது எப்படி உள்ளிட்டவை குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.

    ஒரு சாலையை முழுமையான மேம்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும்போது உரிய திட்டமிடுதல், குறைந்த மூலதனத்தில், மக்களுக்கு பயன் அளிக்கும் விதத்தில் பணிகளை திட்டமிடுதல், இடர்பாடுகள் மற்றும் தடங்கல்களை தாண்டி திட்டத்தை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும், திட்டமிடுதலில் புது புது உத்திகள் கடைப்பிடித்து முறையான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய யுக்திகள் குறித்து உரையாற்றினார்.

    பாலப்பணிகள் முறையாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு திட்டமிடப்பட வேண்டும். உரிய காலக்கெடுவுக்குள் பணிகளை முடிப்பதற்கு தேவையான ஒருங்கிணைப்பு பணிகள், சாலை பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாய்கள், மின்சார வாரிய உபகரணங்கள் மாற்றியமைத்தல் மற்றும் மரங்களை அகற்றுதல் ஆகியவற்றை உரிய திட்டமிடுதலுடன் மேற்கொண்டு பணிகள குறித்த காலத்திற்குள் முடிவடைய பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    சாலைகள் அமைக்கும் பணிகளில் வெள்ள நீர்மட்டத்திற்கு ஒரு மீட்டர் மேல் அடித்தளம் அமையும் வகையில் அமைக்கப்பட வேண்டும். இரு துறைகள் இணைந்து செயல்படும் போது பணிகளை செயல்பாட்டுக்கு எடுத்துக்கொண்டு உரியகாலத்தில் முடிக்கும் வகையில் திட்டமிட வேண்டும்.

    நகர்ப்புற பகுதிகளில் வடிகால்கள் அமைக்கும் பொழுது முறையான அமைக்கப்பட வேண்டும். குடியிருப்புகளை பாதிக்காத வண்ணம் வடிகாலின் மேல் மட்டம் அமைக்கப்படுவதோடு, விதிமுறைகளின் படி முறையான தரக்கட்டுப்பாடு சோதனைகள் மேற்கொண்டு பிறகு நடைமுறைப்படுத்த வேண்டும்.

    சாலையை அகலப்படுத்தும் பணிகள், பாலங்கள் கட்டும் பணிகளில் உரிய பணியிட பாதுகாப்பு (WORK ZONE SAFETY) முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
    நகர்ப்புறங்களில் மேம்பாலம் கட்டும் பணிகளை பொதுமக்களின் போக்குவரத்திற்கு எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். தரக் கட்டுப்பாடு சோதனைகள் விதிமுறைகளின் படி மேற்கொண்டு உரிய பதிவேடுகளில் பதிவு செய்யப்பட வேண்டும்.

    உயர் பொறியாளர்கள் ஆய்வின் போது பரிசோதிக்க வேண்டும். ஆய்வின் போது பார்வையிட வேண்டியவற்றை ஒரு CHECK LIST வடிவில் பதிவு செய்து கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

    திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட்டால்தான், அடுத்தடுத்த திட்டங்களை வகுக்கவும், அவற்றை செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளவும் ஏதுவாக இருக்கும் என்றும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, அரசு முதன்மைச் செயலாளர் திரு.பிரதீப் யாதவ், தேசிய நெடுஞ்சாலை முதன்மை பொறியாளர் பாலமுருகன், வடிவமைப்பு முதன்மை பொறியாளர் இளங்கோ, திட்டப்பணி முதன்மை பொறியாளர் முருகேசன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

    அரசுத் துறைகள் அழிவுப் பாதையில் செல்செல்வதை தடுக்க வேண்டும்; மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....