Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஒரே கருங்கல்லில் சிற்பி செதுக்கிய 'ஹெல்மெட்' விழிப்புணர்வை கலைநயத்தோடும் செய்யலாம்?

    ஒரே கருங்கல்லில் சிற்பி செதுக்கிய ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வை கலைநயத்தோடும் செய்யலாம்?

    திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிற்பி ஒருவர் கருங்கல்லில் தலைக்கவசம் ஒன்றை செய்து அசத்தியுள்ளார். 

    தமிழகத்தில் தற்போது போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபாரதங்கள் விதிக்கப்படுகின்றன. இந்நிலையிலும் சிலர் தலைக்கவசம் அணியாமல் செல்கின்றனர். இதனிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சிற்பி ஒருவர் கருங்கல்லில் தலைக்கவசம் ஒன்றை செய்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் சிற்பக்கலைக் கூடத்தை நடத்தி வருபவர் சரவணன். இவருக்கு வயது 32 ஆகும். இவர் பல்வேறு சிற்பங்களை வடிவமைக்கும் சிற்பி ஆவார். 

    இந்நிலையில், கடந்த மூன்று மாத காலமாக ஒரே கருங்கல்லை செத்துக்கி அதில், தலைக்கவசத்தை உருவாக்கியுள்ளார். இந்த தலைக்கவசத்தின் எடை 8 கிலோ ஆகும். 

    இதுகுறித்து, சிற்பியான சரவணன் கூறுகையில், இரு சக்கர வாகனங்களில் செல்லும் பலர் தலைக்கவசம் அணியாமல் செல்கின்றனர் என்றும் அதே சமயத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் சமயத்திலும் பலர் தலைக்கவசத்தை அணியாமல் இருப்பதால், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறாக கருங்கல்லில் தலைக்கவசத்தை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். 

    சிற்பியான சரவணன், கொரோனா காலகட்டத்தில் கொரோனா பொம்மை, சானிடைசர், முக கவசம் உள்ளிட்ட பொருள்களை கற்களால் செத்துக்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ‘GPay’ நம்பர் கொடுங்க ? எலான் மஸ்க்கை ‘வச்சு செஞ்ச’ சிபி சத்யராஜ் – வைரல் ட்விட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....