Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்யாருடைய வேலைடா இது? உக்ரைன் தூதரகங்களுக்கு வந்த ரத்த பார்சல்!

    யாருடைய வேலைடா இது? உக்ரைன் தூதரகங்களுக்கு வந்த ரத்த பார்சல்!

    உக்ரைன் நாட்டு தூதரகங்களுக்கு விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    உக்ரைன்-ரஷ்யா இடையே பல மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் போரிட்டு உயிரிழந்து வருகின்றனர். மேலும் உக்ரைன் நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். உக்ரைன் நாட்டில்  அதிகமான உயிர் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டன. 

    இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள உக்ரைன் நாட்டின் பல தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் அனுப்பப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    உக்கிரைன் நாட்டில் இருக்கும் மாட்ரிட்டில் தூதரகத்திற்கு நேற்று விலங்குகளின் கண்கள் அடைங்கிய பார்சல் கிடைத்தது. அதில் எந்த வெடிக்கும் பொருள்களும் இல்லை. அங்கு மோப்ப நாய்கள் கொண்டு சோதனை நடத்தப்பட்டது.

    இந்த வேலையை ரஷ்ய ராணுவ வீரர்கள் செய்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான உண்மைக் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. 

    இது தொடர்பாக உக்ரைன் செய்தித்தொடர்பாளர், விலங்குகளின் கண்கள் அடங்கிய  ரத்த பார்சல்கள் ஹங்கேரி, நெதர்லாந்து, போலந்து, குரோஷியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் உக்ரைன் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து தூதரகங்களிலும் பலத்த பாதுகாப்பபுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

    தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....