Wednesday, March 27, 2024
மேலும்
    Homeவானிலைநாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; அடுத்து மூன்றாவது சுற்று மழையா?

    நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; அடுத்து மூன்றாவது சுற்று மழையா?

    வங்கக் கடலில் நாளை காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

    முன்னதாக கடந்த 9 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. பிறகு சில நாட்களியே வலுவிழந்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த கனமழை பெய்தது. மேலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதீத கனமழை கொட்டியது.

    இந்நிலையில், நாளை தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதால், வடகிழக்கு பருவமழையின் மூன்றாம் சுற்று மழை 20 ஆம் தேதிக்கு பிறகு, தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அது மேலும் வலுவடையுமா என்பது குறித்து கண்காணிப்பு மையம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

    இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க.. மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்…ஒரு வாரத்தில் மட்டும் மூன்று முறையாம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....