Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகாதலியின் தாய்க்கு பயந்து மாடியில் இருந்து குதித்த காதலன் பலி

    காதலியின் தாய்க்கு பயந்து மாடியில் இருந்து குதித்த காதலன் பலி

    சேலம், சின்ன கொல்லப்பட்டு அருகே சட்டக் கல்லூரி மாணவன் மாடியில் இருந்து கீழே குதித்ததால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம், கொல்லப்பட்டியில் மத்திய சட்டக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கல்லூரியில் தருமபுரி வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த சஞ்சய் என்ற மாணவர் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய பெற்றோர் வங்கியில் மேலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    அதே கல்லூரியில் கரூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகள் ஹரிணி தனது தாய் மற்றும் தங்கையுடன் கொல்லப்பட்டி பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி வருகிறார். 

    சஞ்சய் மற்றும் ஹரிணி இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சட்டக் கல்லூரியிலும் தங்களது காதலை இவர்கள் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சுமார் ஒரு மணி அளவில் காதலி தங்கி இருந்த வீட்டுக்கு சென்ற சஞ்சய், ஹரிணியுடன் மொட்டை மாடியில் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 

    அப்போது அங்கு ஹரிணியின் தாயார் வந்ததால், சஞ்சய் மொட்டை மாடியில் இருந்து குதித்தார். அப்போது சஞ்சய்க்கு பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 

    இந்தச் சம்பவம் குறித்து, கன்னங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதையடுத்து காவல்துறையினர் சஞ்சயின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    காதலியின் தாய்க்கு பயந்து காதலன் மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தீவிர பயிற்சியில் ஆஸ்திரேலியா; அஸ்வினை சமாளிக்க புதிய யுக்தி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....