Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபழுதான செல்போனை சரி செய்து தராததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

    பழுதான செல்போனை சரி செய்து தராததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

    பழுதான செல்போனை பெற்றோர் சரி செய்து தராததன் காரணமாக 15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா அடுத்துள்ள பீட்டா நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஆன்லைன் கேம் விளையாடுவதில் ஆர்வமாக இருந்து வந்தார். இந்நிலையில், அந்த சிறுவன் கேம் விளையாட பயன்படுத்தி வந்த செல்போன் பழுது அடைந்தது. இதனை சரி செய்து கொடுக்க வேண்டும் என தனது பெற்றோரை தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால், சிறுவனின் பெற்றோர் செல்போனை பழுதுநீக்கி தர மறுத்துள்ளனர். 

    இதையடுத்து, செல்போன் இல்லாமல் ஆன்லைன் கேம் விளையாட முடியாததால் சிறுவன் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். இதனால், தனிமையில் இருந்த சிறுவன் தனது அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

    இந்தச் சம்பவம் குறித்து கிரேட்டர் நொய்டா காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப்பார்க்க இதோ வாய்ப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....