Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்: மாணவர்கள் போராட்டம்!

    கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்: மாணவர்கள் போராட்டம்!

    நாகை மாவட்டம் பாப்பக் கோவில் அருகே மாணவி தற்கொலை செய்துக் கொண்டதால் உடன் படிக்கும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். 

    நாகையை அடுத்துள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபி படித்து வந்தார் மாணவி சுபாஷினி. இவர் கல்விக் கட்டணம் செலுத்தாததால் ஆசிரியர் ஒருவர் இவரை வகுப்புக்கு வெளியே நிற்க சொல்லியிருக்கிறார். மாணவியை அனைவரின் முன்பு இவ்வாறு செய்ததால் மாணவி தன்னை இழிவுபடுத்துவதாக உணர்ந்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என சொல்லப்படுகிறது. 

    இதனையடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் லட்சுமி காந்தன், தாலாளர் ஆனந்த் மற்றும் அந்த மாணவியை வெளியே நிற்கச் செய்த ஆசிரியர் ஜென்சி போன்றோரின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் நாகை காவல் துறையினர். 

    மேலும் மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டுமென்று அம்மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் அக்கல்லூரி மாணவர்கள் என அனைவரும் கலந்துக் கொண்டு பாப்பக் கோவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று கல்லூரி பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் கல் எரிந்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. 

    இதைத் தொடர்ந்து நாகை உயர் காவல் துறை அதிகாரி சரவணன் அளித்த நம்பிக்கையின் பேரில் மாணவ மாணவிகள் மற்றும் உறவினர்கள் அனைவரும் உடன்பட்டு பிறகு களைந்து சென்றனர். மேலும் கிழக்கு கடற்கரை சாலையான நாகர்கோயில் – வேளாங்கண்ணி சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.

    கல்லூரி கல்விக் கட்டணம் செலுத்தாதால் மாணவி தற்கொலை செய்துள்ளாரா இல்லை வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா அல்லது ஆசிரியர்கள் கடுமையாக பேசினார்களா என்பது முழு விசாரணைக்கு பின் தெரிய வரும் என்பது குறிப்பிடத் தக்கது. அதுமட்டும் இல்லாமல் இவ்வாறு மாணவர்கள் மனநிலையை  புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வது தவறு மற்றும் கண்டிக்கத்தக்கது என்று பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....