Tuesday, May 16, 2023
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அட்டகாசம், ஆதிக்கம், அராஜகம், அடக்குமுறை...இதுதான் திமுக - ஓபிஎஸ் அறிக்கை!

    அட்டகாசம், ஆதிக்கம், அராஜகம், அடக்குமுறை…இதுதான் திமுக – ஓபிஎஸ் அறிக்கை!

    தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அரசு அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் மிரட்டப்பட்டும், தாக்கப்பட்டும் வந்தனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டுமல்லாமல், அவர்களுடைய குடும்பத்தினரின் அட்டகாசம், ஆதிக்கம், அராஜகம், அடக்குமுறை தமிழ்நாடு முழுவதும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னிர்செல்வம் அவர்கள் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சூடுப்பிடித்துள்ளது. 

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 

    ஓ.பன்னிர்செல்வம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், கவுன்சிலர் பணி என்பது மக்களைக் காக்கும் பணி. மக்களுக்கு சேவை செய்வது தான் அவர்களது இன்றியமையாப் பணி. ஆனால், இதையெல்லாம் மறந்துவிட்டு, தங்கள் நோக்கமே வேறு என்பது போல் ஆளுங்கட்சியின் கவுன்சிலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். நான் இங்கே இரண்டு உதாரணங்களை சுட்டிக்காட்ட கடமைப்பட்டு இருக்கிறேன் என்றவர்,  சமீபத்தில் வெளிவந்து இணையத்தில் வைரலான சிசிடிவி காட்சியை நினைவுக்கூர்ந்தார். 

    சென்னை மாநகராட்சியில் மகளிருக்காக ஒதுக்கப்பட்ட 34-வது வார்டிலிருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருமதி சர்மிளா காந்தி. இவர் தன்னுடைய அலுவலகத்திற்கு வந்து தன்னுடைய இருக்கையில் தனது கணவரை அமர்த்தி, வீடு கட்டும் உரிமையாளரிடமிருந்து கவுன்சிலரின் கணவர் ஏதோ எதிர்பார்ப்பதும், அதற்கு அந்த உரிமையாளர் மறுத்ததன் காரணமாக அவரை கவுன்சிலரின் கணவர் மற்றும் அங்கிருந்த தி.மு.க.வினர் மிரட்டுவதும், இவை எல்லாவற்றிற்கும் அந்த பெண் கவுன்சிலர் ஆதரவு அளிப்பதும் அந்த சிசிடிவி காட்சியில் தெள்ளத் தெளிவாகிறது என்று பன்னிர் செல்வம் அவர்கள் தெரிவித்தார். 

    இதேபோல், தாம்பரம் மாநகராட்சிக்கு 31-வது வார்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி எம். சித்ரா தேவி என்பவரின் மைத்துனரும், திருநீர்மலை தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளருமான திரு. எச். தினேஷ் என்பவர் தி.மு.க.வினருடன் நேற்று மாலை ஓர் உணவுக் கடைக்குச் சென்று அந்தக் கடை உரிமையாளரிடம் 10,000 ரூபாய் கேட்டு அராஜகத்தில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டினார்.

    லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது 

    இச்சம்பவங்களின் மூலம், உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதும், ஆணாதிக்கம் கொடிகட்டி பறப்பதும் தெள்ளத் தெளிவாகிறது என்றும் மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதே ஆணாதிக்கத்தை தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், மகளிர் இட ஒதுக்கீட்டையே கொச்சைப்படுத்தும் நோக்கில் தி.மு.க.வினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

    தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அராஜகச் செயல்களுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அவர் தன் அறிக்கையில் கூறினார். மேலும், முதலமைச்சர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகளில் அவர்களது கணவரோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ ஈடுபடுவதைத் தடுக்கவும், மக்களை மிரட்டும் கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க.வினர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் ஓபிஎஸ் வலியுறுத்தினார். 

    அதேசமயம், சுட்டிக்காட்டிய நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளரை – மிரட்டியவர்கள் மீதும், உணவுக் கடையை அடித்து நொறுக்கியவர்கள் மீதும் சட்டப்படி வழக்கு பதிவு செய்து தண்டனைப் பெற்றுத் தரவும், அடித்து நொறுக்கப்பட்ட கடைக்கு உரிய இழப்பீட்டை வழங்கவும், இதுபோன்ற செயல்கள் இனி வருங்காலங்களில் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளவும், வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஓபிஎஸ் வலியுறுத்துவதாக தனது அறிக்கையில் தெரிவித்தார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....