Monday, March 18, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்ஐபோன் 15.4 புது அப்டேட் : சார்ஜிங்க் பிரச்சினையை சரி செய்ததா ஆப்பிள் நிறுவனம் ?

    ஐபோன் 15.4 புது அப்டேட் : சார்ஜிங்க் பிரச்சினையை சரி செய்ததா ஆப்பிள் நிறுவனம் ?

    ஐபோன் பயனர்கள் தங்களுடைய ஐஓஎஸ் 15.4 ஐ அப்டேட் செய்த சில நாட்களில் மோசமான பேட்டரி அனுபவத்தைக் கொடுத்தது. இது குறித்து பேசிய ஐபோன் பயனாளர்கள் விரைவிலேயே சார்ஜ் முடிந்து விடுவதாகவும், அடிக்கடி சார்ஜரை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படுவதாகவும் கூறி இருந்தனர்.

    முதன்முறையாக இதை ஆப்பிள் நிறுவனமும் ஒப்புக்கொண்டது. மேலும், புதிய அம்சங்கள் பொறுத்தப்பட்டுள்ளதால் அதனை செயற்படுத்த அதிக எனர்ஜி எடுத்துக்கொள்கிறது என்று தெரிவித்து இருந்தது. இதனைச் சரி செய்வோம் என்று உறுதியும் கூறி இருந்தது. இப்பொழுது ஆப்பிள் நிறுவனம் புதிய மேம்பாடுகளுடன் சார்ஜ் குறையும் பிரச்சனையை சரி செய்யும் ஐஓஎஸ் 15.4.1 மற்றும் ஐபேடுஓஎஸ் 15.4.1 ஆகியவற்றையும் வெளியிட்டு உள்ளது. 

    இந்த ஆப்பிள் ஐஓஎஸ் 15.4.1 புது சில மேம்பாடுகளுடன், ஐபோனின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. இதனோடு சேர்த்து சில அணுகல்தன்மை பிரச்சனைகளையும், சார்ஜிங் பிரச்சனைகளையும் சரி செய்கிறது. பல பயனர்கள் தங்களுடைய போன்களில் ஆப்பிள் ஐஓஎஸ் 15.4 பேட்டரியின் ஆயுளைக் குறைப்பதாக குறைகூறி இருந்தனர். அதன் பரவல்தன்மை பொறுத்தே இந்த பிரச்சனை சரி செய்யப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியிருந்தது. 

    ஆனாலும் தொடர்ச்சியான புகார்களுக்குப்பின் ஆப்பிள் நிறுவனம் அதன் குறையை ட்விட்டரில் ஒப்புக்கொண்டது. இதுகுறித்து கருத்து கூறிய அந்நிறுவனம் மென்பொருள் புதுப்பித்தலுக்குப்பின் பயன்பாடுகள் அதிக சக்தியைப் பயன்படுத்துவது இயல்புதான் என்று கூறியுள்ளனர். 

    ஐபோன் மற்றும் ஐபாடில் இந்த அம்சம் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாக இருக்கிறது. இதனுடன் சேர்த்து மாஸ்க் அணிந்திருந்தாலும் பேஸ்லாக் வேலை செய்யும் அம்சமும் சேர்ந்து வருகிறது. இதற்கு முன்பு இது ஐபோன் 12 மற்றும் 13ல் மட்டுமே வந்திருந்தது. 

    உங்கள் முகம் மாஸ்க் அணிந்து மறைக்கப்பட்டிருந்தாலும் உங்கள் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளை வைத்து இது எளிதாக உங்களை அடையாளம் கண்டு கொள்ளும். என்னதான் இதனை ஆப்பிள் நிறுவனமே முன்வந்து செய்திருந்தாலும், நிஃப்டி நிறுவனமாகிய ஆப்பிளுக்கு அதன் பயனாளர்கள் ஐஓஎஸ் 15.4ஐ புதுப்பிக்கத் தயங்கியது ஒரு அவமானமான செயல் ஆகும். 

    இந்த ஆப்பிள் ஐஓஎஸ் 15.4.1 புதிப்பிப்புடன் சேர்த்து அதன் ஐபோன் மற்றும் ஐபேடுகளுக்கு பாதுகாப்பு அம்சங்களையும் அதிகரித்து இருக்கிறது. மேலும் இது சில அணுகல் தன்மை சிக்கல்களையும் மாற்றி அமைக்கும் என்றாலும் அது என்ன என்னவென்று ஆப்பிள் நிறுவனம் குறிப்பிடவில்லை. 

    இதற்கான அறிவிப்பு உங்கள் ஐபோன் திரையில் வந்து சேரும். அப்டேட் செய்வதற்கு முன்பாக உங்கள் போன் இணைய வசதியுடனும் குறைந்தபட்சம் 60 சதவீத பேட்டரியுடனும் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் போனில் உள்ள டேட்டாக்களையும் காப்பு பிரதி எடுக்க மறந்து விடாதீர்கள்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....