Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று செயல்படும்

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று செயல்படும்

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று செயல்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    நாட்டில் மிகப்பெரிய மற்றும் பழமையான உயிரியல் பூங்கா செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவாகும். இந்தப் பூங்காவிற்கு பல பகுதிகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். 

    தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால் உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. 

    இந்நிலையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறந்து இருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. எப்போதும் செவ்வாய்க்கிழமை வார விடுமுறை என்ற நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு பார்வையாளர்களின் வருகையையொட்டி இன்று செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு 90 ரூபாயும் சிறியவர்களுக்கு 50 ரூபாயும் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

    கஸ்ட்டி படத்தின் டிரைலர் எப்போது? வெளிவந்த தகவல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....