Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணையுவுள்ள புதிய படம்... வெளிவந்த அறிவிப்பு

    ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணையுவுள்ள புதிய படம்… வெளிவந்த அறிவிப்பு

    நடிகர்கள் ஆர்யா மற்றும் கவுதம் காரத்திக் இணைந்து நடிக்க உள்ள புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆர்யா- கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்க உள்ள மிஸ்டர் எக்ஸ் (Mr.X) என்ற படத்தை தயாரிக்க உள்ளதாக பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாவும், கவுதம் கார்த்திக் வில்லனாகவும் நடிக்கின்றனர்.

    இப்படத்தை விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற எஃப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்க உள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு உகாண்டா மற்றும் செர்பியா போன்ற நாடுகளில் நடைபெற உள்ளது. 

    மேலும், இப்படத்திற்கு திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார். தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விபரம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று செயல்படும்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....