Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்கஸ்ட்டி படத்தின் டிரைலர் எப்போது? வெளிவந்த தகவல்!

    கஸ்ட்டி படத்தின் டிரைலர் எப்போது? வெளிவந்த தகவல்!

    வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கஸ்டடி படத்தின் டிரைலர் வருகிற 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

    மாநாடு, மன்மத லீலை போன்ற வெற்றி திரைப்படங்களுக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யா நடிக்கும் தெலுங்கும் படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் நாக சைன்யாவுக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு ‘கஸ்டடி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

    இந்தப் படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இப்படத்தில் பிரேம்ஜி, சம்பத், பிரியாமணி, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து வருகின்றனர். 

    வருகிற மே மாதம் 12-ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தற்போது கஸ்டடி படத்தின் டிரைலர் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் வருகிற 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

    மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இத்திரைப்படம் நேரடியாக உருவாகும் என்று ரசிகர்கள் நினைக்க, இந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

    பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....