Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'பொங்கலோ பொங்கல்' - மாட்டுப் பொங்கல் ஒரு சிறப்பு பார்வை

    ‘பொங்கலோ பொங்கல்’ – மாட்டுப் பொங்கல் ஒரு சிறப்பு பார்வை

    பொங்கல் பண்டிகை என்றால் தமிழர்களாகிய அனைவருக்கும் மகிழ்ச்சி தான் …அதிலும் மாட்டு பொங்கல் என்றால் ஜல்லிக்கட்டு விளையாட்டு அப்படி எப்படி என்று மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்று விடுவோம் …அதில் பொங்கலின் முக்கிய அம்சமாக திகழ்வது உழவர்கள் என்னும் விவசாயிகளே அவ்வுழவர்களின் முக்கிய பங்காக இருப்பது கால நடைகள் தான்.

    பொதுவாக நகரங்களை விட மாட்டு பொங்கலானது கிராமங்களிலே மிக ஆரவாரமாக சிறப்பாக கொண்டாடப்படும். தை பொங்கலின் மறுநாள் தமிழர்களினால் கொண்டாடப்படுவதே மாட்டு பொங்கலாகும் ..

    மாட்டு பொங்கலானது மாடுகளை குளிப்பாட்டி, மாடுகள் இருக்கும் இடத்தை சுத்தம் செய்து, வர்ணம் பூசி, மாடுகளுக்கு மாலையிட்டு திலக மீட்டு உளவு கருவிகள் அனைத்தும் வைத்து படையல் வைத்து வருடம் முழுதும் நமக்காக உழைக்கும்
    மாடுகளுக்கு நன்றி கூறும் விதமாக பொங்கல் வைத்து கொண்டாடு வார்கள். அதுவே மாட்டு பொங்கல் என்று கூறப்படுகிறது …

    மேலும், மாட்டு பொங்கல் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு. தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் அறிந்த ஒரு விஷயம் தமிழர்களாகிய ஒவ்வொருவரும் ஜல்லிக்கட்டு என்றால் மீசை முறுக்கி , மார் தட்டி களமிறங்காவர்கள் …தமிழனாக பிறந்த எவரும் பிடிக்காது என்று கூறாத விளையாட்டு…

    மாட்டுப் பொங்கல் அன்று மக்கள் தங்களுடைய சாதி, மதம் போன்ற வேற்றுமைகளை மறந்து ஒன்றுகூடி மாட்டுப்பொங்கலை கொண்டாடி வருகின்றனர். மாட்டுப்பொங்கல் பண்டிகையினால் மக்களின்அன்பும், உயரிய எண்ணங்கழும் ஒன்று கூடி வீரத்தை விளைவித்து மனிதப்பண்பு வெளி வருகிறது …இதைத்தாண்டி தமிழனின் வீரத்தை போற்றும் வகையில் ஜல்லிக்கட்டானது பல நூற்றான்டுகளாக பறை சாற்றி தமிழ் மக்கள் வழியாக கடந்து வரும் ஒரு வீரமிக்க விளையாட்டாகும் ..

    அதை தடை செய்ய வேண்டும் என பல எதிர்ப்புகள் வந்தாலும் ,அதையும் தாண்டி அதற்காக தமிழர்களாகியவர்கள் என்றும் விட்டு கொடுக்காமல் , போராடி நம் ஜல்லி கட்டை மீட்டு பெற்றனர் ..இன்றளவும் இது தமிழ்நாட்டில் மதுரை மாநகரில் அலங்கணல்லூர் ஜல்லி கட்டு, பால் மேடு ஜல்லி கட்டு என்று கூறினாலே தமிழராகியவர்களில் மீசை முருக்கதோர் யாரும் இல்லை …அப்படி இன்றளவும் மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது ..

    மாட்டுப் பொங்கல் தமிழகத்தில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. மாறாக கா்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற தென் இந்திய மாநிலங்களிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மூர்க்களத்தில் காளை அடுக்குபவனுக்கு தான் என் பெண்ணை கரம் பிடித்து கொடுப்பான் என்று பல கூற்றுகளும் நிகழ்ந்தது ..
    அப்பொழுதுதான் அவரின் வீரம் வெளிப்படும் என்று வீரமனாவன் என்பதும் தெரியவரும். கூறியது போன்று தன பெண்ணை வைத்து காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் காளை அடக்கியவானுக்கே பின்பு கரம் பிடித்து குடுத்தனர்…

    எனவே நம் வீரத்திற்கு ஆடையாளமான கால்நடைகளான மாடுகளையும் , பசுக்களையும் பேணி பாதுகாத்து அறிந்து கொள்ள வேண்டும் …மேலும் மாட்டு பொங்கலை பற்றி அறிவதோடு மட்டுமல்லாமல், முடிந்தவரை நம் தமிழரின் வீரத்திற்கு அடையாளமாக இருக்கும் ஜல்லிக்கட்டையும், கால்நடைகளான ,காளைகளையும், பசுக்களையும் வளர்க்க வேண்டும்.

    அடுத்த திரைப்படத்தின் பெயரை அறிவித்த பார்த்திபன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....