Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவனத்துறைக்கு புதிய உத்திரவை பிறப்பித்தது உயர்நீதி மன்றம்!

    வனத்துறைக்கு புதிய உத்திரவை பிறப்பித்தது உயர்நீதி மன்றம்!

    தமிழ்நாடு முழுவதிலும் உள்ள வனப் பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடக் கூடாது என சென்னை உயர் நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது.

    திருமுருகன் என்பவர் தேனி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், கால்நடைகள்  மேய்ச்சலுக்காக விடப்படுவதாகவும் அதற்கு தடை விதிக்க கோரியும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

    அவர் அளித்த மனுவில் கால்நடைகளை வனப்பகுதிக்குள் விடுவதால் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாக குறிப்பிடப் பட்டிருந்தது. இதன் அடிப்படையில், திரு பாரதிதாசன் மற்றும் சத்திஷ் குமார் கொண்ட நீதிபதிகள் அமர்வுக்கு குழு இதனை விசாரித்தது. 

    மனுவை ஆய்வு செய்த பின் வனப்பகுதிக்குள் கால்நடைகள் செல்வதால் வன விலங்குகளுக்கு இடையூறு விளைவதாக தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் வனப்பகுதிக்குள் கால்நடைகள் செல்ல அனுமதி கிடையாது என வனத்துறைக்கு உத்திரவிடப் பட்டிருக்கிறது.theni forest

    இதனிடையே வனத்துறை தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு வழக்கு விசாரணைக்கு வந்தது. சி பி ஐ  குழு, சி பி ஐ நிர்மலா தேவி, டி எஸ் பி சந்தோஷ்குமார் மற்றும் டி எஸ் பி கஷ்குமார் உள்ளிட்டோரை புலனாய்வுக் குழுவில் நிர்ணையிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

    நீதிபதிகள் அமர்வுக் குழு முன்னரே தமிழ்நாடு அரசு, தமிழக வன கல்லூரி பயிற்றுனர் ராஜ்மோகன், தடுப்பு படம் கூடுதல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ் ஆகியோரை  பரிந்துரைச் செய்துள்ளதை  சுட்டிக் காட்டியது.

    மேலும் கேரள அரசு தரப்பில் இன்னும் சி பி ஐ அதிகாரிகள் நியமிக்க படாததால், இந்த வழக்கு மார்ச் 17 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது  நீதிமன்றம்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.

    Most Popular