சென்னை: இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 5 ரூபாய் அதிகரித்து ரூ.4,840-க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,835 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 5 ரூபாய் அதிகரித்து ரூ.4,840-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ரூ.38,720-க்கு விற்பனையாகிறது
அதேபோல், சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,275 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 5 ரூபாய் அதிகரித்து ரூ.5,280-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ரூ.42,240-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில், ஒரு கிராம் வெள்ளி நேற்று 66 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையான நிலையில், இன்று 50 காசுகள் குறைந்து 66 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 81.8950 ஆக உள்ளது.