Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் அஜித்குமாருடன் பிக்பாஸ் நட்சத்திரங்கள்.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

    நடிகர் அஜித்குமாருடன் பிக்பாஸ் நட்சத்திரங்கள்.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

    நடிகர் அஜித்குமாருடன் பிக்பாஸ் நட்சத்திரங்களான பாவனி, அமீர் மற்றும் சிபி ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தென்னிந்திய நடிகர்களுள் மிக முக்கியமான ஒருவர், அஜித்குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வலிமை திரைப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆயினும் வசூலில் பெரும் வேட்டையை நிகழ்த்தியது. இந்நிலையில், வலிமை திரைப்படத்தை தொடரந்து அஜித்குமார் மீண்டும் போனி கபூர் தயாரித்து எச்.வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். 

    இத்திரைப்படத்திற்கு சமீபத்தில் துணிவு என்று பெயரிடப்பட்டது. இப்படத்திற்காக அஜித்குமார் இருக்கும் தோரனை அஜித் ரசிகர்களை மட்டும் இன்றி, அனைத்து தமிழ் திரையுலக ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. தற்போது, துணிவு படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்துவருகிறது. 

    தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் அஜித்குமாருடன் அங்கு சுற்றுலா சென்றுள்ள பிக்பாஸ் நட்சத்திரங்களான பாவனி, அமீர் மற்றும் சிபி ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படத்தை பாவனி மற்றும் அமீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படமானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

    இதையும் படிங்க: மாமன்னன் ராஜராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? – சரத்குமார் காரசார பதிவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....