Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு ஆனந்தமான செய்தி..

    சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு ஆனந்தமான செய்தி..

    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான், ‘பிரின்ஸ்’.  தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.

    மேலும், இந்த திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்  நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் எந்த திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்ச ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

    இதையும் படிங்க: நயன்தாராவுடன் திரைப்படம், அனிருத் உடன் பார்ட்டி.. விஜய் செய்த அந்த செயல் – ஷாருக்கானின் ஹாப்பி ட்விட்!

    முன்னதாக, பிரின்ஸ் திரைப்படத்தில் இருந்து பிம்பிலாக்கி பிலாப்பி மற்றும் ஜெஸ்ஸிகா பாடல்கள் வெளிவந்துள்ளன. இப்பாடல்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. 

    மேலும், சமீபத்தில் பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தீபாவளி ரிலீசாக இத்திரைப்படம் வெளிவரவுள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர். 

    இந்நிலையில், அவர்களை அதிகபட்ச ஆனந்தத்தில் ஆழ்த்தும் வகையில் மேலும், ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது. நாளை ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு பிரபல கல்லூரியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், இந்த விழாவில் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....