Tuesday, March 19, 2024
மேலும்
    Homeவாழ்வியல்பராமரிப்புஉங்கள் வீட்டில் எறும்பு தொல்லையா ?? விரட்ட எளிய வீட்டுக் குறிப்புகள்..

    உங்கள் வீட்டில் எறும்பு தொல்லையா ?? விரட்ட எளிய வீட்டுக் குறிப்புகள்..

    வீட்டிலுள்ளவர்களுக்காக நாம்  இனிப்பு பண்டங்களை வாங்கி வைத்தாலும், எறும்பு தான் அதிகம் இந்த இனிப்புகளை சுவைக்கின்றது.  பொதுவாகவே குழந்தைகள் இருக்கின்ற வீட்டில் உணவுப் பண்டங்கள் சிந்தி சிதறி இருக்கும். இதை நாம் உடனடியாக சுத்தம் செய்தாலும், எறும்புகள் அந்த இடத்தை நோக்கி படை எடுக்கும்.

    antsவீட்டு வாசல்படி முதல் கோடு போட்டது போல சமையலறை, படுக்கையறை, சில சமயங்களில் கழிவறைகளில் கூட எறும்புகள் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும். நீங்களும் எறும்புகளை விரட்ட எறும்புப் பொடி, சாக்பீஸ் என எல்லாவற்றையும் பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால்  நம்முடைய வீட்டிலுள்ள சில எளிய பொருட்களைக் கொண்டு எப்படி வீட்டில் எறும்புத் தொல்லையை விரட்டலாம் என அறிவோம்.

    coffee

    காபி பொடி 

    காபி பொடி வாசனை எறும்புகளுக்கு ஆகாது என்பதால், அதனை எறும்பு இருக்கும் இடத்தில தூவி விடவும். இதனால் எறும்புகள் திரும்ப வராது.

    pepper

    மிளகுத் தூள் 

    எறும்புகளுக்கு மிளகுத்தூளின் வாசனை எரிச்சலூட்டும். எனவே எறும்பு வரும் இடங்களில் மிளகுத் தூளை தூவி வைக்கலாம். மிளகின் காரமான மணமே எறும்புத் தொல்லையை விரட்டி விடும்.

    oil

    எசன்ஷியல் ஆயில் 

    எறும்புகளுக்கு அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும்  மணமும் பிடிக்காது. புதினா ஆயில், டீ ட்ரி ஆயில் , வேப்ப எண்ணெய் மற்றும் இலவங்கப்பட்டை எண்ணெய் இவற்றுடன் தண்ணீர் சேர்த்து எறும்பு இருக்கும் இடங்களில் ஸ்பிரே செய்யுங்கள். இது கொசு மற்றும் எறும்புத் தொல்லையிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

    vinegar

    வினிகர் 

    எறும்புத் தொல்லையை போக்க இதன் அமிலத்தன்மை எறும்புகளை விரட்டி விடும் என்பதால் வொயிட் வினிகரையும் நீங்கள் பயன்படுத்தலாம்.  தண்ணீரையும்,  வொயிட் வினிகரையும் சமமாக அளவில்  ஒரு ஸ்பிரே பாட்டிலில் எடுத்து எறும்பு வரும் இடங்களில் ஸ்பிரே செய்யுங்கள். எறும்பு பொந்து, சமையலறை மேடை, குப்பை கூடைகள் இருக்கும் இடங்களில் ஸ்பிரே செய்யுங்கள். வினிகரின் வாசனை எறும்புகளுக்கு பிடிக்காது.

    liquid

    லிக்விட் டிடர்ஜென்ட் 

    சோப்பின் நெடிய மணத்திற்கு எறும்புகள் தாங்காது .இந்த சோப்பு தண்ணீரை எறும்பு வரும் இடங்களில் தெளியுங்கள். எறும்புகள் ஓடி விடும். எறும்புகள் முற்றிலுமாக போன பிறகு அந்த இடத்தை துடைத்து எடுங்கள்.

    oven

    சுத்தம் சுகம் தரும்

    நம் வீட்டில் உணவுகள் ஆங்காங்கே சிந்தி கிடப்பதும் எறும்புகளை அதிகமாக ஈர்க்கும். எனவே சமையல் அறையை நன்றாக துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் பொருட்களை, இனிப்பு வகைகளை காற்று புகாத டப்பாவில் அடைத்து பாதுகாப்பாக வையுங்கள். வீட்டில் குப்பைகள் இருந்தால் உடனே அப்புறப்படுத்தி விடுங்கள். உங்கள் வீட்டில் செல்லப் பிராணிகள் இருந்தால் அதன் உணவுப் பாத்திரங்களையும் கழுவி சுத்தமாக வையுங்கள்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....